முகப்பு...

Sunday 19 August 2012

மரணத்தில் பிறந்த பிறப்பு....


ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் ராகினியை சந்தித்து, தான் பணிபுரியும் கல்லூரியின் ஆண்டுவிழாவிற்கு தலைமையேற்று நடத்தும்படி அழைக்க காத்திருந்தான்.  ஆட்சியர் ராகினியின் பணியாளர் ராஜேஷை அழைக்க, உள்ளே நுழைந்தவன் அங்கே கம்பீரமாய் தன் இருக்கையில் அமர்ந்திருந்த ராகினி அச்சு அசல் தன் மனைவி லட்சுமியைப்போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைய, ஆட்சியரிடம் பேசிவிட்டு வெளியேறும் தன் மாமியார் யசோதாவை நேருக்கு நேர் சந்தித்த ராஜேஷ்...ராகினி என இழுக்கஎன் பேத்திதான் என்றாள் யசோதா. உறைந்து நின்றவனின் எண்ணங்கள் பின்னோக்கி செல்ல......

யசோதா, கண்ணனின் ஒரே மகளான லட்சுமி  பட்டப்படிப்பு படித்திருந்தாலும் வேலைக்கு செல்ல விருப்பமில்லாதவள்.  வசதியான வீட்டை சேர்ந்தவள் என்பதால் அவர்கள் வீட்டிலும் கட்டாயப்படுத்தவில்லை.

படித்து சென்னையில் நல்ல வேலையில் இருக்கும் லெட்சுமியின் கணவன் ராஜேசும் வசதியில் குறைந்த வனில்லை.  கணவன், மாமியார் கமலாமாமனார் ரமணி என ஒரு வட்டத்திற்குள் வாழ்பவள்.  பெங்களூரில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக  வந்திருக்கும் லட்சுமிக்கு ஒரு மாதம் சென்ற சுவடே தெரியவில்லை.  அவள், தொலைக்காட்சி தொடர் பார்த்துக்கொண்டிருந்தாளும் மனம் தொடரில் செல்லாமல் ஒருவித அவஸ்தையாக இருக்கஇடுப்பு வலி எடுப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். மகளின் முகம் மாறுவதைக் கண்ட யசோதா ``என்னம்மா செய்யுது..ஏன் ஒரு மாதிரி இருக்க..சூடா எதும் குடிக்கிறியா கண்ணு... இல்லம்மா வலிக்கிறமாதிரி இருக்கு. என்னமோ செய்யுது..

யசோதா போனில் பேசிக்கொண்டிருந்த கணவனிடம் ``என்னங்க லட்சுமிக்கு இடுப்பு வலி வந்திடுச்சி..நம்ம டாக்டருக்கு நாம வரதா போன் போட்டு சொல்லிடுங்க. பயப்படாத கண்ணு சித்த பொருத்துக்க. அப்படித்தான் வலிக்கும் பிரசவம் ஆக இன்னும் மணிநேரம் ஆகும்  மகளுக்கு ஆறுதல் சொன்னபடி மருத்துவமனைக்கு செல்லத்தேவையானதை எடுத்துக்கொண்டு என்னங்க வண்டி தயாரா ஹாஸ்பிடல் போவனும்.

சாமிக்கு விளக்கேற்றி மகளுக்கு விபூதியை பூசிவிட்டு “கவலைப்படாத எல்லாம் நல்லபடியா ஆகும் என்று கூறியபடியே மகளை காருக்கு அணைத்தபடி சென்றாள்”.  ”மாப்பிள்ளைக்கும் போனபோட்டு சொல்லிடுங்க லட்சுமிக்கு  இடுப்புவலி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி ஹாஸ்பிடல் போறோம்னு” கண்ணனும் ராஜேசுக்கு போனில் விவரம் சொல்லிட்டு குடும்ப டாக்டர் சாலினியின் மருத்துவமனைக்கு சென்றனர்.

டாக்டர் பரிசோதனை செய்துவிட்டுஏம்மா லட்சுமி உனக்கு வித்தியாசமா எதுவும் தெரியலியா..குழந்தை மூவ்மெண்டே இல்லியே என்று கூற யசோதாவிற்கு முகத்தில் பயம் தொற்றிக்கொண்ட்து.  இல்லியே டாக்டர் கொஞ்ச நேரம் முன்னாடி கூட வலின்னு சொன்னாளே..சாலினி அல்ட்ராசவுண்ட் எடுத்துப்பார்த்தவாறே நான் சந்தேகப்பட்டது சரிதான். குழந்தை மூவ்மெண்ட் திடீர்னு நின்னுபோச்சு. உடனே ஆபரேசன் செய்யனும். இல்லாட்டி உசிருக்கே ஆபத்து என்றவாறே டாக்டர் ஆபரேசனுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்ய சென்றுவிட..யசோதாவின் முகத்திலோ கவலையும்பயமும் மாறிமாறி காணப்படகண்ணன் செய்வதறியாது மாப்பிள்ளை ராஜேசிற்கு போனில் விவரம் கூறிக்கொண்டிருந்தார்.

நீங்க ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க மாமா. செலவ பத்தி கவலை இல்ல.  ரெண்டு பேருக்கும் எந்த ஆபத்தும் இல்லாம காப்பாத்த சொல்லுங்க.  நாங்க அடுத்த விமானத்தில் வந்திடறோம்.

மருத்துவமனையில் நுழையும் சம்பந்தி வீட்டாரைக் கண்ட கண்ணன் வாங்க மாப்பிள்ளைசம்பந்தியம்மா வணக்கம் எப்படி இருக்கீங்க..?? ம்ம் இருக்கோம்.. நீங்க குழந்தை பெத்தவங்கதான..?? புள்ள மூவ்மெண்ட் இல்லாததக்கூட கண்டுபிடிக்க தெரியாதா என்ன யசோதாவிடம் சம்பந்திக்கே உரிய தோரணையில் கமலா வினவ.  டாக்டர் என்னதான் சொல்றாங்க...??

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபரேசன். எனக்கு ஒன்னுமே புரியல யசோதா கண்கலங்க.. அதற்குள் சாலினி யசோதாவிடம் பாருங்கம்மா ரெண்டு உசிரையும் காப்பாத்த முயற்சி பண்றோம்.  ஆனா ஒரு உசிருக்குத்தான் உத்தரவாதம் கொடுக்க முடியும் என்றவண்ணம்ராஜேசிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிய சாலினியிடம், டாக்டர் என் மனைவிய எப்படியாச்சும் காப்பாத்துங்க. கண்கள் பணிக்க வேண்டினான். நம்பிக்கையோட இருங்க.  என்னால ஆன முயற்சிய செய்யறேன். மத்தது கடவுள்விட்ட வழி என்றபடியே ஆபரேசன் தியேட்டருக்குள் நுழையும் சாலினியையே வெறித்துக் கொண்டிருந்தாள் யசோதா.  அனைவரும் அவரவர் மனதில் தோன்றிய இறைவனையெல்லாம் வேண்டிக்கொள்ள குழந்தை வீறிட்டழும் சத்தம் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில்...

செவிலித்தாய் குழந்தையை குளிப்பாட்டி எடுத்து வரவாடிய முகத்துடன் வெளிவந்த சாலினி யசோதாவிடம் மன்னிச்சுக்கோங்கம்மா எங்களால உங்க மகள காப்பாத்த முடியல..குழந்தைய மட்டுந்தான் காப்பாத்த முடிஞ்சுது” அய்யோ என்ற அலறலுடன் உள்ளே நுழைந்த யசோதா  மகளைக் கட்டிக்கொண்டு கதறினாள்.

நிரந்தரமாய்க் கண்மூடியது தன் தாயென்றறியாமல் அழகாய் ரோசாப்பூவை துணியில் சுற்றியதுபோல் குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை யாருமே கவனிக்கவில்லை. பிறந்தது ஆணாபெண்ணா என அறியும் ஆவல் கூட இல்லாமல் அனைவரும் லட்சுமியைக்கண்டு கதறிக்கொண்டிருந்தனர்.

யசோதா தன் மகளின் குழந்தை என்னவாயிற்று என பார்க்க எத்தனிக்க..உறங்கும் அதன் அழகில் ஒரு நிமிடம் தன்னை மறந்தவள் கையில் குழந்தையை வாரி மாப்பிள்ளையிடம் கொடுக்க..அய்யய்யோ..யாருக்கு வேணும் இந்த சனியன்.. பொறக்கும்போதே அம்மாவையும் தூக்கிடுச்சி.  எமனோட வந்த இது ராசி எம்பையனையும் ஏதாச்சும் செய்திடும் எங்களுக்கு வேண்டாம்.. ராஜேஷ் நீ இதத்தொடாத..வெறுப்பை வார்த்தைகளாய் வீசும் கமலாவின் பேச்சில் துடித்துப்போன யசோதா, “என்ன மாப்பிள்ளை இப்படி அமைதியா இருக்கீங்க..இவ உங்க இரத்தம்..உங்க வாரிசு..

ஓ பெண் குழந்தையா...இத காலம் பூரா வச்சி என்ன செய்யறது..பூனைய மடில கட்டி சகுனம் பார்த்தமாதிரியில்ல இருக்கும்..என் லட்சுமியே போயாச்சு எங்க அம்மா சொல்றதுதான் சரி....இவ தரித்திரம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ யார் கண்டா..குழந்தையை பார்க்கக்கூட மனமில்லாமல் வெறுக்க..

அதற்குள் கண்ணன் ஆகவேண்டிய கார்யங்களுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வரமருத்துவமனையிலிருந்து நேரே மயானத்திற்கு சென்று எரித்துவிட்டு வந்தாகிவிட்டது..

எழவு வீட்டுல சொல்லிக்க கூடாது என்று புறப்பட்டனர் ராஜேஷ்கமலாரமணி மூவரும். ரமணி என்ற ஒரு மனிதர் அந்தக்குடும்பத்தில் பெயரளவில் கணக்குக்கு மட்டுமே என்பதையறிந்த யசோதா எதுவும் அவரிடம் கூறாமல் இவர்களிடம் நியாயம் கேட்க அவர்களோ..முடியவே முடியாது நீங்க குழந்தைய வளர்ப்பீங்களோ இல்ல அனாதை விடுதியில் சேர்ப்பீங்களோ என்ன வேணா செய்துக்கோங்க.

ஆவேசமான யசோதா...என் பேத்திய எதுக்கு அனாதை விடுதியில் விடனும்..தாத்தாபாட்டி நாங்க இருக்கிறவரை அவளை பொக்கிசமா பாதுகாப்போம். எந்தக்குழந்தைய அனாதைவிடுதியில் சேர்க்க சொன்னீங்களோ அவ கிட்ட நீங்க வந்து ஒரு வார்த்த பேசமாட்டமாபார்க்கமாட்டமானு ஏங்குறமாதிரி தரணியே அவ புகழ் பாட வளர்த்துக்காட்டறேன். நீங்கதான் படித்தும் முட்டாளாகமூடப்பழக்கத்துக்கு ஆளாகிப்போய் அறிவிழந்தா நாங்களும் அப்படியே செய்வோமா என்ன..இறப்பு மாத்தமுடியா இயற்கைன்னு தெரிஞ்சும் அதுக்கு காரணம் சொல்லி பச்ச மண்ணு மேல பழியப்போடற உங்கள மாதிரி ஆளுங்க எத்தன நூற்றாண்டு ஆனாலும் திருந்த மாட்டீங்க..

பாட்டிதாத்தாபணம் வசதி இருக்கிற என் பேத்திக்கே இந்த நிலைன்னா. வசதியும் இல்லாமபாதுக்காக்க யாரும் இல்லாத அம்மா இழந்துத் தவிக்கும் குழந்தையின் கதியென்ன..??  ஆவேசம் அடங்காதவளாய். கூடாது அப்படி ஒரு நிலை இனி யாருக்கும் வரக்கூடாது என முணுமுணுத்தவாரே... ஒரு ஆசிரமம் துவங்கி பாதிக்கப்பட்ட குழந்தைகளை தன் பேத்திகளாய் வளர்க்க முடிவெடுத்தபடியே வீட்டிற்குள் தன் பேத்தியை அழைத்துச் சென்றாள். மகாலட்சுமியே என் பேத்தி உருவுல வந்திருக்கு. பலபேர வாழவைக்கத்தான் உங்க அம்மா உன்ன பூமியில் கொடுத்துட்டு போயிருக்கா. குழந்தையை கொஞ்சத்துவங்கினாள் யசோதா..!!!

ராஜேசின் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது யசோதாவின் அறைகூவல்... ஹலோ...யாரோ அழைப்பதை உணர்ந்து உணர்விற்கு திரும்பியவன்... தன்னையழைத்தது ராகினி என அறிந்து நினைவுகளிலிருந்து மீண்டவன், கல்லூரி விழா பற்றி கூற தனது பணிக்குறிப்புகளை பார்வையிட்ட ராகினி..மன்னிக்கனும் மிஸ்டர்.ராஜேஷ் அதே நாளில் எனக்கு மனிதநேயம் கற்பித்த என் பாட்டி துவங்கியுள்ள ஆதரவற்றோர் இல்லத்தின் ஆண்டுவிழா.. அந்தநாளில் நான் எந்த நிகழ்விற்கும் செல்வதில்லை. அப்பா என அழைக்கவேண்டியவள் இன்று மிஸ்டர் என அழைத்தது, தான் மறந்த மனிதநேயத்திற்கு கிடைத்த சாட்டையடியாய் நினைத்து இயந்திரமாய் பேச நாவெழாமல் வெட்கி வெளியேறினான்...!!



18 comments:

  1. பாட்டி துவங்கியுள்ள ஆதரவற்றோர் இல்லத்தின் ஆண்டுவிழா.. அந்தநாளில் நான் எந்த நிகழ்விற்கும் செல்வதில்லை. அப்பா என அழைக்கவேண்டியவள் இன்று மிஸ்டர் என அழைத்தது, தான் மறந்த மனிதநேயத்திற்கு கிடைத்த சாட்டையடியாய் நினைத்து இயந்திரமாய் பேச நாவெழாமல் வெட்கி வெளியேறினான்...!!//

    கதையின் கருவும் சொல்லிச் சென்றவிதமும்
    முடிவும் மிக மிக் அருமை
    மனம்கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழரே..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்..

      Delete
  2. சிறப்பான சாட்டையடி கதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
  3. Replies
    1. தம்பியின் ஊக்கத்திற்கு நன்றி..:):)

      Delete
  4. .
    மரணத்தில் பிறந்த பிறப்பு..

    மரணமென்பது யாருக்கும். எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும். வரலாமென்பதை புரிந்துகொள்ளமல் இக் கதாபாத்திரத்திலுள்ள பொண்மணி கமலாபோல் மூடநம்பிக்கையுடைய பலர் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

    அவர்கள் என்னமோ இந்த உலகத்திற்கு சாகாவரம் பெற்றுவந்தவர்களென நினைத்து அறியாமையின் ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பதுமட்டுமல்லாமல். பேத்தியின் பிறந்த நேரம் சரியில்லாததால்தான் மருமகளுக்கு எமன் இறக்கம்காட்ட மறுத்துவிட்டானெனநினைத்து ஒன்றுமறியா பச்சகுழந்தைக்கு சனியனென்கிறபட்டம் சூட்டி பச்சிழங்குழந்தையை வெறுக்கும் இப்படிப்பட்ட அதிமூடர்களுக்கு இந்த சிறுகதையானது நல்லதொரு பாடமாக இருப்பதோடுமட்டுமின்றி இப்படிப்பட்டவர்களுடைய புத்தி தெளிவுபெறும் வாய்ப்பு இருக்குமென நம்புகிறேன்.

    கல்வியும் நாகரீக வளர்ச்சியும் நிறைந்த நாட்டில் ராஜேஷ்போன்ற படித்த சில பட்டாதாரிகள். மூடநம்பிக்கைக்கு ஆளகிய பெற்றோரின் மூடத்தனமான செயலுக்கு கட்டுப்பட்டு தான் கற்றதை மறந்து படித்த முட்டாளாகவும், மனிதநேயமற்றவர்களாகவும் இருந்துவிடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அப்பா என்றழைக்கவேண்டிய பாசமகள் மிஸ்டர் ராஜேஷ் என அழைத்து என்றோ மறந்த மனிதநேயத்திற்கு இன்று சொல்லால் சாட்டையடி கொடுத்திருப்பது அருமை.

    சம்பந்தியின் மூடநம்பிக்கயுடன் கூடிய மனிதாபிமானமற்ற பேச்சு, மற்றும் பெற்றமகளை இழந்ததுக்கத்திலும் யசோதா மனிதநேயத்துடனும், வைராக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், சபதமெடுத்து அதில் வெற்றியும் கண்டு. மூடநம்பிக்கையுடயவர்களுக்கும், மனிதாபிமானமற்றவர்களுக்கு பாடம் கற்பித்திருப்பது அருமை.

    மொத்தத்தில் மூடநம்பிக்கையால் இப்படி நடந்துகொண்டவர்களுக்கும் நடந்துகொண்டிருக்கிறவர்களுக்கும் சிறு கதைமூலம் பெரிய செருப்படி கொடுத்திருக்கிறார் கதாசிரியர் காயத்ரி அவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆனந்த்.தங்கள் கருத்திற்கு நன்றி..

      Delete
  5. நிஜத்தில் படித்தவர்களும் மூடநம்பிக்கை என்ற படுகுழியில் விழுந்து கிடக்கின்றார்கள் என்பதே உண்மை...! இந்த கதை அதற்கு ஒரு நல்ல உதாரணம்...!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்..உண்மைதான் தோழரே. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  6. நல்ல விழிப்புணர்வு பதிவு சகோதரி!வாழ்த்துக்கள்

    உண்மைவிரும்பி
    மும்பை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ.தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்..நன்றி.:)

      Delete
  7. சரியான முடிவு...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றி... (த ம 6)

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__