முகப்பு...

Wednesday, 22 August 2012

அவதாரங்கள்...!!!



தகப்பனாய் தரணியை
அறிமுகப்படுத்தி...

சகோதரனாய்..
சங்கடங்கள் தீர்த்து
சமமாய் பாவித்து....

மகனாய்
மனம் குளிர்வித்து....

தோழனாய்
தோள்கொடுத்து.
தோல்விகளை தகர்த்தெரிய
தைரியமளித்து...

காதலனாய்
காதல் பகிர்ந்து
கனவுகளை சுமக்கச்செய்து
மனம் கனியவைப்பவனே...!!

கணவனென்றப்
பதவியுமே..
உன்கண்ணையும்
மறைப்பதேனோ..??

கன்னியரின் கண்ணீரை
சுவைத்திடவே
நீ
கனிவையும்
காட்ட மறுப்பதுமேனோ....?

புதுமைப்பெண்ணை
புத்தகத்தில் படித்து
பூரிப்படைபவனே.....!!

புக்ககத்திலே
பெண்ணையும்
புதிராய் நோக்குவதுமேனோ..??

கணவனாகவும்
கடவுளாகவும்,
காலமாகவும்..
அவதாரம் பலவெடுத்து..
அதிசயங்கள் நிகழ்த்துபவனே...!!
சிலநேரம்
காலனாகவும்
விளங்குவதேனோ...??!!








5 comments:

  1. முடிவில் நல்லதொரு கேள்வி... (TM 2)

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  3. கணவனென்றப்
    பதவியுமே..
    உன்கண்ணையும்
    மறைப்பதேனோ..??
    புதுமைப்பெண்ணை
    புத்தகத்தில் படித்து
    பூரிப்படைபவனே.....!!

    புக்ககத்திலே
    பெண்ணையும்
    புதிராய் நோக்குவதுமேனோ..??

    Chanceless lines... இன்று பெரும்பாலான ஆண்களின் மனம் இதுதான்... வாய்கிழிய வெளியில் பெண்விடுதலையைப்பற்றி பேசிக்கொண்டே வீட்டுக்குள் பெண்மையை அடிமைப்படுத்தி வைத்திருப்போர் ஏராளம்...

    நல்ல எழுத்து... நீங்கள் உண்மையிலேயே கவிக்காயத்ரிதான்...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__