முகப்பு...

Saturday 8 September 2012

அன்புக்குரியவனே..!!


நின் காதலில் கசிந்துருகி
கண்ணீர்க்கடலில்
நினைவுப்படகில் தத்தளிக்கும்
எனைக் கரம் பிடித்து
கரைசேர்க்க
அன்புக்குரியவனே அருகே வா...!!

பொய்யுரைக்கா உன் விழி கூர்ந்து
உள்ளிருக்கும் எனை உணர
அன்புக்குரியவனே அருகே வா...!!

பசி, தூக்கம் தவிர்த்து
பசலையில் வாடும் எனை
முத்தம் பரிமாறி
நின்மடிகிடத்தி உறங்கவைக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!

மனதாள்பவனே
நான் உந்தன் சுவாசமா..
நீ கொள்ளும் பயணத்தின்
ஓட்டுநரா...
நடத்துனரா..
உடன் பயணிக்கும் பயணியா..
இடமில்லாமல் இறக்கிவிடப்பட்டவளா..??
நானறிய
அன்புக்குரியவனே அருகே வா..!!!

என் எண்ணத்தை சமைத்து
கவிதையாய்ப் பரிமாற
உண்டு மகிழ்ந்து
உன்னுள்ளம் உரைக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

யாவற்றிலும், யாதுமாய்
தோன்றுபவனே..
என்னவனாய் என்னில்லத்தில்
என்றென்றும்
நீயாகத் தோற்றமளிக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

இயற்கையின் இரகசியத்தை
இடைவிடாது பேசிமகிழ
அன்புக்குரியவனே அருகே வா...!!!

நம் காதல்பயணத்தில்
மழலையிசை கேட்டு மகிழ..
பிரபஞ்சம் போற்ற
நம் பிள்ளைகளை பேணிகாக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!!

இதயத்தில் இருப்பவனே
என் இறுதிப் பயணத்தின்
இறங்(க்)கும் தருவாயில்
சுவாசம் துறந்து
உன் இதயத்தில் கலக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!

என் கரம்பிடித்து
காதல் உணர்த்திய நின் கரம்
என் சதைக்கு தீ மூட்டி
பாரினில் பஞ்சபூதமிருக்கும்வரை
நின் நெஞ்சத்தில் குடியிருக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

14 comments:

  1. யதார்த்தமான அழகிய வரிகள்... வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  2. உணர்ச்சிகரமான காதல் வரிகள் ! அழகான கவிதை! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில்
    அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

    சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

    ReplyDelete
  3. மனதாள்பவனே
    நான் உந்தன் சுவாசமா..
    நீ கொள்ளும் பயணத்தின்
    ஓட்டுநரா...
    நடத்துனரா..
    உடன் பயணிக்கும் பயணியா..
    இடமில்லாமல் இறக்கிவிடப்பட்டவளா..??
    நானறிய
    அன்புக்குரியவனே அருகே வா..!!!
    __________________

    அருமையான வரிகள் அக்கா...

    கவிதை அருமை...

    தொடருங்கள்.

    ReplyDelete
  4. அன்பின் கவிக்காயத்ரி - கவிதை அருமை - காதலி காதலனிடம் எதிர் பார்பதென்ன - அத்த்தனையையும் கவிதை வடிவில் காதல்னிடம் கேட்கும் காதலி - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பின் சீனா ஐயா...தங்கள் வாழ்த்துக்கள் எம் எழுத்தை வளப்படுத்தட்டும்..:)

      Delete
  5. காயத்ரி, உனது வரிகள் எனது கண்களில் நீரைப் பொழிய வைத்து விட்டன!

    ReplyDelete
    Replies
    1. வாங்க.. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சியும், நன்றியும். தொடர்ந்து எம் எழுத்துக்களை செம்மைப்படுத்த குறையிருப்பின் சுட்டிக்காட்டவும்..:)

      Delete
  6. Hi mates, its impressive piece Ball Of Foot writing concerning tutoringand completely explained, keep it up all the time.

    ReplyDelete
  7. great submit, very informative. I'm wondering why the opposite specialists of this sector do not notice this.
    You must continue your writing. I am sure, you've a great readers' base already!


    Here is my web-site Foot Pain symptoms

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__