கம்பீரமாய் காட்சியளிக்கும்
கரியையும்
காட்சிப்பொருளாக்கும்
கரியையும்
காட்சிப்பொருளாக்கும்
மனிதர்கள்...
கையெடுத்துக் கும்பிட்டவரிடம்
கையேந்தும் நிலை எதற்கு...??
இரும்புச் சங்கிலியால்
இறுக்கிப் பிணைத்து ஆசனமைத்து..
மூர்க்கனாய் அமர்வதுமேன்....??
கரி
கட்டுண்டு கிடப்பது
அங்குசத்திற்கா..??
அன்பிற்கா...??
வீறு கொண்டு வெகுண்டெழுந்தால்..
எதிர்கொள்ளும் வீரமுமுண்டா
நம்மிடம்..??
அமைதியாய் இருப்பதனாலேயே..
அடிமைப் படுத்தி இரசிப்பதுமேனோ.....??
இயற்கையாய் கிடைக்கும்
உணவையுமே
எடுத்துக்கொடுக்க
தயங்குவதுமேனோ....??
அதற்காய் கிடைத்த
பழத்தினையுமே
அளந்துக் கொடுப்பதுமேனோ...??
விலையில்லா புன்னகை விடுத்து
பொன்னகைக்காய்
கரிவதையும் தேவைதானா....??
கடவுளாய்க் கண்ட
கரியதனையும் காசுக்காய்
காட்சியாக்குவதேனோ..??
வனத்தில் விரும்பித் திரிந்த
வாரணங்கள்
வனமிழந்து திரிவதையும் காணாயோ...??
வனமிழந்து உணவுக்காய்...
ஊர் ஊராய்த் திரியும்
வாரணங்கள்
உன் வயிற்றுக்காகவும்
திரிய வேண்டுமா...?
எதிர்த்துப் பேசா விலங்கிடம்தான்
வீரத்தை காட்டவும் வேண்டுமா....??
வாயில்லா கரியதனை வதைத்துதான்
வம்சமும் விளங்க வேண்டுமா..??
அறியாமையால் செய்த
அறிவற்ற செயலை
அறிந்து.........
அறிவை அறிவோடு
பயன்படுத்தி அறிவாய்...
அன்பாய் நீயும் விளங்குவாய்....!!
இரும்புச் சங்கிலியால்
இறுக்கிப் பிணைத்து ஆசனமைத்து..
மூர்க்கனாய் அமர்வதுமேன்....??
கரி
கட்டுண்டு கிடப்பது
அங்குசத்திற்கா..??
அன்பிற்கா...??
வீறு கொண்டு வெகுண்டெழுந்தால்..
எதிர்கொள்ளும் வீரமுமுண்டா
நம்மிடம்..??
அமைதியாய் இருப்பதனாலேயே..
அடிமைப் படுத்தி இரசிப்பதுமேனோ.....??
இயற்கையாய் கிடைக்கும்
உணவையுமே
எடுத்துக்கொடுக்க
தயங்குவதுமேனோ....??
அதற்காய் கிடைத்த
பழத்தினையுமே
அளந்துக் கொடுப்பதுமேனோ...??
விலையில்லா புன்னகை விடுத்து
பொன்னகைக்காய்
கரிவதையும் தேவைதானா....??
கடவுளாய்க் கண்ட
கரியதனையும் காசுக்காய்
காட்சியாக்குவதேனோ..??
வனத்தில் விரும்பித் திரிந்த
வாரணங்கள்
வனமிழந்து திரிவதையும் காணாயோ...??
வனமிழந்து உணவுக்காய்...
ஊர் ஊராய்த் திரியும்
வாரணங்கள்
உன் வயிற்றுக்காகவும்
திரிய வேண்டுமா...?
எதிர்த்துப் பேசா விலங்கிடம்தான்
வீரத்தை காட்டவும் வேண்டுமா....??
வாயில்லா கரியதனை வதைத்துதான்
வம்சமும் விளங்க வேண்டுமா..??
அறியாமையால் செய்த
அறிவற்ற செயலை
அறிந்து.........
அறிவை அறிவோடு
பயன்படுத்தி அறிவாய்...
அன்பாய் நீயும் விளங்குவாய்....!!
அன்றாடம் நாம் பார்த்துப்போகும் நிகழ்வினை
ReplyDeleteவித்தியாசமாக யோசித்து அருமையான ப்திவாக்கிக்
கொடுத்தது மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே..தங்கள் ஊக்கம் எம் எழுத்தை வளர்க்கட்டும்..
Deletetha.ma 2
ReplyDeleteநல்ல பல சிந்திக்க வைக்கும் கேள்விகள்...
ReplyDelete/// அறியாமையால் செய்த
அறிவற்ற செயலை
அறிந்து.........
அறிவை அறிவோடு
பயன்படுத்தி அறிவாய்...
அன்பாய் நீயும் விளங்குவாய்....!! ///
நன்று...
நன்றி...
நன்றி சகோ..தங்களது தொடர்ந்த ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது..
DeletePARITHI MUTHURASAN17 September 2012 05:08
ReplyDeleteஅமைதியாய் இருப்பதனாலேயே..
அடிமைப் படுத்தி இரசிப்பதுமேனோ.....??
அருமையான வரிகள் தத்துவ சிந்தனை/
@Parithi Muthurasan..நன்றி தோழரே..
Delete