Friday, 31 August 2012

சிதறல்கள்..


அழகை கண்கள் எடைபோட
மனம் தோற்றுப்போகிறது...
மனம் எடைபோட
கண்களும் ஜெயிக்கிறது....:):):)
**********
எண்ணத்திலுள்ள உனை
வண்ண ஓவியமாய் தீட்ட.
ரவிவர்மனும் தோற்றான்..........!!
********** 
என் மனமறியா 
உன் அலைபேசியும் மௌனிக்க 
அலைபேசியிடம் கொண்ட கோபம் 
உன்மேல் திரும்பியதே 
உன் நிலையறியாமல்...:(:( 
********** 
நட்புக்கும்
கண்திருஷ்டி உள்ளதோ
கலிகாலத்தில்...??
**********
உன்னை 
ஒரு நொடியும்
மறக்க மறக்கும் என்னை
நினைப்பதற்கு நேரமில்லாமல் நீ....!!!
**********
அன்று
என் மௌனத்திற்கும்
அர்த்தம் புரிந்த நீ..
இன்று
என் வார்த்தைக்களுக்கு
விளக்கம் கேட்டு 
வினோதமாய் விளங்குவதேனோ...??!!
**********


அறுதிக்கடிதம்.....மனம் திறவாமல்
மௌனித்தே
மனதில் குடியிருப்பவனே..!!

உன்வசப்பட்ட
நானும்..
நிரந்தர மௌனமேற்குமுன்..

நின் மனமும் திறப்பாயோ..?
மௌனமும் துறப்பாயோ..??

மௌனத்தில் இருப்போனே..
மனதிடம் வினவு..!!
நான்
உன் மனம் அடைந்தேனோ..??
உள்ளமும் கவர்ந்தேனோ..??

ஆன்மாவைத் தீண்டியவனே..
நின் ஆன்மாவைத் தொட்டேனா..??
விடையறிந்து...
ஆன்மாவைத் தூதனுப்பி
விடையளிப்பாய் நீயுமெனக்கு..

நின் மௌனத்திற்கெதிராய்
ஒலிக்கும் குரல்கள்..
எனை ஊமையாக்கி
நம்பிக்கையை
வெடிக்கச்செய்ய
எழும்பும் குரல்களா..??
என் விதியின் சதியா..??
விதிமாற்றும் சதியின் சதியா..??

வம்சம்தழைக்க
வாரிசு வழங்க விழையும்
வஞ்சியிவளை
நஞ்சுண்ண செய்வாயோ..??

நானணியும்
மௌன ஆபரணத்தை
நித்தமும் அணிவித்துப்பார்க்க
நிரந்தர ஆசையுங்கொண்டாயோ..??

நேசத்திற்குரியோனே...
நீண்டகடிதமனுப்ப
நெஞ்சம் விழைகிறது..
கண்ணீரோ கலைக்கிறது..

என் அறுதிக்கடிதம்
அனாதரவாய்...
குப்பையில் சேருமோ..??
நின் ஆன்மாவைச்சேருமோ
அள்ளி அணைப்பாயோ
அவனி துறக்கச்செய்வாயோ.....??

என்னவனே..
என் இறுதி மூச்சும்
நின்பெயர் கூறும்..
என்றும் நிறைந்திருப்பாய்
என்னவனாய்
பேதையின் நெஞ்சினிலே..

இறுதி ஆசையை
எடுத்துரைக்கிறேன்....
ஆன்மா விழித்திடின்
ஒருமுறையேனும்
உள்ளன்போடு அழைத்துப்பார்
என் பெயரை....
அவனியில் நானிருப்பின்
அயர்தியில் வந்தடைவேன் நின்னையே..!!!
Wednesday, 29 August 2012

சிதறல்கள்..


உன்
அழைப்பில்லா
என் அலைபேசியும்
மௌனித்ததே சோகத்தில்....:(:(
**********
நீ
உன் மனதை
எனக்கு
திறப்பதற்குள்
காலனும்
எனைக் காதலித்து விடுவானோ...???
**********

நீ
உன் மனதில்
இடமளிக்காமல்,
என் மனதை
ஆக்கிரமித்து
ஆளுமை செய்யும்
காதல் அராஜகத்தை
எங்கு கற்றாய்....??
********** 

உன்னுடன் பேசா
ஒரு நொடியும்..
யுகமாய்
எனக்கு....
**********
நம்பியவன்
சந்தேகிக்க..
நிர்வாணமாய்
உணருகிறேன் நானும்....
**********
நீதானே மௌனமிருக்கிறாய்..??
உன்னுடன் சேர்ந்து
என் அலைபேசியும் மௌனிக்கிறதே..??.!!
**********
எனக்கு காது கேளாதோவென
சந்தேகிக்கிறேன்...
உன் குரல் கேட்காததால்....!!
**********

Tuesday, 28 August 2012

“தமிழ்க்குடில்”
அன்புக்குரிய  வலைப்பூ தோழமைகளுக்கு  இனிய வணக்கம், 

உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை பகிந்து கொள்ளவே இந்தப் பதிவு. தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் நலம் பயக்கும் விதமாகவும், வளம் சேர்க்கும் விதமாகவும் முகநூலில் தமிழ்க்குடில் என்ற பெயரில் தனிக்குழுமம் ஒன்று ஒரு வருடமாக இயங்கிவருகிறது.

இத்தளத்தின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் வகையில் பல பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  கவிதை, கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் என பலக் கோணங்களில் தமிழை வளர்க்கவும், தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்லவும், இந்த தலைமுறையை தமிழில் பேசவைக்கவும் முயற்சிகள் எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

எமது உறவுகளான இணையதள தோழமைகள் பலரும் அங்கு இணைந்திருக்கிறார்கள்.  இன்னும் நிறையப் படைப்பாளிகளை அதில் சேர்க்கவும், தமிழுக்கு தொண்டு செய்யவும் எண்ணம்.

அதற்கான முகவரி இணைப்பை இங்கு வழங்கியிருக்கிறோம்.

https://www.facebook.com/groups/209486265759191/

இந்த இணைப்பை கிளிக் செய்து தாங்கள் இந்த குழுமத்தில் சேர விருப்பம் தெரிவிக்கலாம். உடனடியாக சேர்த்துக் கொள்ளப் படுவீர்கள்.

தமிழில் அக்கரையும், ஆர்வமும் உள்ள அத்தனை நல்லுங்களையும் வரவேற்கிறேன். 

*முக்கியமாக நல்லப் படைப்பாளிகள் அனைவரையும் வரவேற்கிறோம். இங்கு  நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகைத் தரும் அனைவரையும் இக்குழுவில் இணைந்து தங்கள் தமிழ்ச்சேவையைத் தொடரும்படி வேண்டிக்கொள்கிறோம்.
உங்களின் படைப்புகளுக்காகவும், பங்களிப்புகளுக்காகவும் காத்திருக்கிறோம்.

அவ்வப்பொழுது நடத்தப்படும் கவிதை, கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெறும் நபருக்கு வீட்டு முகவரிக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும்  அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்குறிப்பு: தமிழ்க்குடில் தனது அடுத்தகட்டமாக தமிழ்க்குடில் பெயரில் ஒரு அறக்கட்டளையும் துவங்கியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அதன் இணைப்பும் இங்கு பகிர்ந்திருக்கிறோம்..

https://www.facebook.com/ThamizhkkudilTrust

உங்கள் வரவை எதிர்ப்பார்த்த வண்ணம்..
தமிழ்க்குடில்..

வார்த்தை..வார்த்தைப்பூக்களின்
வாசமறியா இடத்தில்
மௌனத்தை சூடிக்கொள்வதே
சிறந்தது...!!

**************
எழுத்தை தூதாக்கி
எண்ணங்களை
உன்னிடம் சேர்க்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறேன்...
இதயமறியா
நீ
எழுத்தையும் அறிவாயோ...??
*******

மழலை...!!!

நயவஞ்சகம்,
நம்பிக்கைதுரோகம்
பேராசை
சுயநலம்..
வன்முறை
அன்புணரா உள்ளத்திலிருந்து
ஒளிந்துகொள்ள
மழலையென்னும் போர்வையை 
மீண்டும் ஏற்கத்துடிக்கும் மனம்...
இயற்கையின் நியதியென
விரட்டியடிக்கும் இறை....!!
இயற்கையை
வெல்லவும் முடியாமல்
யதார்த்தத்தை
ஏற்கவும் முடியாமல்
உயிருக்குத்துடிக்கும் மீனாய்
மனம்...!!Monday, 27 August 2012

அன்பு....


அன்பினால்
மெழுகாய் உருகிய மனமும்
அலட்சியத்தினால்
இரும்பாய் இறுக...
நெகிழச்செய்ய
சாகாவரமான
சத்தியநெருப்பின் ஒளியை
தேடுகிறது மனம்...

**************

அன்பெனும் 
வார்த்தைப்பூக்களை
நம்பிக்கையெனும் நார்கொண்டு
அழகிய ஆரமாக்கி
இதயத்தில் வீற்றிருக்கும்
இறைக்கு அணிவிக்க
இறையோடு
மலரும் மகிழ்கிறது...
**************

Wednesday, 22 August 2012

அவதாரங்கள்...!!!தகப்பனாய் தரணியை
அறிமுகப்படுத்தி...

சகோதரனாய்..
சங்கடங்கள் தீர்த்து
சமமாய் பாவித்து....

மகனாய்
மனம் குளிர்வித்து....

தோழனாய்
தோள்கொடுத்து.
தோல்விகளை தகர்த்தெரிய
தைரியமளித்து...

காதலனாய்
காதல் பகிர்ந்து
கனவுகளை சுமக்கச்செய்து
மனம் கனியவைப்பவனே...!!

கணவனென்றப்
பதவியுமே..
உன்கண்ணையும்
மறைப்பதேனோ..??

கன்னியரின் கண்ணீரை
சுவைத்திடவே
நீ
கனிவையும்
காட்ட மறுப்பதுமேனோ....?

புதுமைப்பெண்ணை
புத்தகத்தில் படித்து
பூரிப்படைபவனே.....!!

புக்ககத்திலே
பெண்ணையும்
புதிராய் நோக்குவதுமேனோ..??

கணவனாகவும்
கடவுளாகவும்,
காலமாகவும்..
அவதாரம் பலவெடுத்து..
அதிசயங்கள் நிகழ்த்துபவனே...!!
சிலநேரம்
காலனாகவும்
விளங்குவதேனோ...??!!

நானும், கடவுளும்...

இடம் மயான பூமி:

நான் : இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.. வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..

கடவுள்: நகைக்கிறார்..

நான் :  ஏன் நகைக்கிறாய்..??

கடவுள் : நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..

நான் : ஏன் அதில் என்ன தவறு..??

கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி நினைத்ததுண்டா..??

நான்  : என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே  ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..

கடவுள்:எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?

நான் : அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ இருக்கே…??

கடவுள்  : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?

நான்: என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?

கடவுள்: ஐந்து  ஆண்டுகளில் வருவாயா..?

நான்: என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல் நானெப்படி உன்னையடைவது..?

கடவுள்: குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??

நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??

கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??

நான் : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??

கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை    
அப்படித்தானே..??

நான் : எந்த உண்மை..?

கடவுள் : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் அதை அடைந்தே தீரணும்..இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க மறுப்பதேன்..?

நான் : பயம் தான்..

கடவுள் :உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?

நான்:எனக்குப்பிறகு எனது குடும்பம்..?

கடவுள் : இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?

நான் : அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என்
குடும்பத்தாரை நினைத்து....

கடவுள்: நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள் மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?

நான்: --------

கடவுள் : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே..என்ற    மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல்  பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட  பேராசைதான் காரணமோ...?

நான் :சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..??     
எனக்கா..??

கடவுள்: ஆம்..

நான்: கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும், அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..??   

கடவுள் : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ   
கிடையாது..அப்படித்தானே..??

நான்: ஆம். எனக்குப்பயமில்லை. ஏன் இப்பொழுதே வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை. உன்னை சரணடைகிறேன் சஞ்சலமின்றி.

கடவுள் : உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்.உன் இறுதியாசையும் கூறு நிறைவேற்றுகிறேன்.

நான்: திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள்மனிதநேயமே  மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று அகிலமே மகிழ்ச்சியில்  திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா  என் இறுதி ஆசையை..??

கடவுள் : ஹஹஹா...

நான் : என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??

கடவுள்: இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக்  கேட்கிறாயே.. அதான்  சிரித்தேன்..

நான் : குழப்பமுடன்..???

கடவுள் : நீ கேட்ட அனைத்தும் உள்ளது.  அதனருமை உணராமல் அப்படியே அனாதரவாய்  கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை  உணர, உணரவேண்டியது  உணர்த்தப்படும்.. உணர்ந்து  என்னையடைவாய்...!!

நான்: உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை தெளிவுபடுத்திய என்இறைவா...!!! உனைவணங்குகிறேன்.  யாதுமானவனே, யாவரும் இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அருள்வாய்..

கடவுள்: அப்படியே ஆகட்டும்..

நான்: குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...

Sunday, 19 August 2012

மரணத்தில் பிறந்த பிறப்பு....


ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் ராகினியை சந்தித்து, தான் பணிபுரியும் கல்லூரியின் ஆண்டுவிழாவிற்கு தலைமையேற்று நடத்தும்படி அழைக்க காத்திருந்தான்.  ஆட்சியர் ராகினியின் பணியாளர் ராஜேஷை அழைக்க, உள்ளே நுழைந்தவன் அங்கே கம்பீரமாய் தன் இருக்கையில் அமர்ந்திருந்த ராகினி அச்சு அசல் தன் மனைவி லட்சுமியைப்போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைய, ஆட்சியரிடம் பேசிவிட்டு வெளியேறும் தன் மாமியார் யசோதாவை நேருக்கு நேர் சந்தித்த ராஜேஷ்...ராகினி என இழுக்கஎன் பேத்திதான் என்றாள் யசோதா. உறைந்து நின்றவனின் எண்ணங்கள் பின்னோக்கி செல்ல......

யசோதா, கண்ணனின் ஒரே மகளான லட்சுமி  பட்டப்படிப்பு படித்திருந்தாலும் வேலைக்கு செல்ல விருப்பமில்லாதவள்.  வசதியான வீட்டை சேர்ந்தவள் என்பதால் அவர்கள் வீட்டிலும் கட்டாயப்படுத்தவில்லை.

படித்து சென்னையில் நல்ல வேலையில் இருக்கும் லெட்சுமியின் கணவன் ராஜேசும் வசதியில் குறைந்த வனில்லை.  கணவன், மாமியார் கமலாமாமனார் ரமணி என ஒரு வட்டத்திற்குள் வாழ்பவள்.  பெங்களூரில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக  வந்திருக்கும் லட்சுமிக்கு ஒரு மாதம் சென்ற சுவடே தெரியவில்லை.  அவள், தொலைக்காட்சி தொடர் பார்த்துக்கொண்டிருந்தாளும் மனம் தொடரில் செல்லாமல் ஒருவித அவஸ்தையாக இருக்கஇடுப்பு வலி எடுப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். மகளின் முகம் மாறுவதைக் கண்ட யசோதா ``என்னம்மா செய்யுது..ஏன் ஒரு மாதிரி இருக்க..சூடா எதும் குடிக்கிறியா கண்ணு... இல்லம்மா வலிக்கிறமாதிரி இருக்கு. என்னமோ செய்யுது..

யசோதா போனில் பேசிக்கொண்டிருந்த கணவனிடம் ``என்னங்க லட்சுமிக்கு இடுப்பு வலி வந்திடுச்சி..நம்ம டாக்டருக்கு நாம வரதா போன் போட்டு சொல்லிடுங்க. பயப்படாத கண்ணு சித்த பொருத்துக்க. அப்படித்தான் வலிக்கும் பிரசவம் ஆக இன்னும் மணிநேரம் ஆகும்  மகளுக்கு ஆறுதல் சொன்னபடி மருத்துவமனைக்கு செல்லத்தேவையானதை எடுத்துக்கொண்டு என்னங்க வண்டி தயாரா ஹாஸ்பிடல் போவனும்.

சாமிக்கு விளக்கேற்றி மகளுக்கு விபூதியை பூசிவிட்டு “கவலைப்படாத எல்லாம் நல்லபடியா ஆகும் என்று கூறியபடியே மகளை காருக்கு அணைத்தபடி சென்றாள்”.  ”மாப்பிள்ளைக்கும் போனபோட்டு சொல்லிடுங்க லட்சுமிக்கு  இடுப்புவலி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி ஹாஸ்பிடல் போறோம்னு” கண்ணனும் ராஜேசுக்கு போனில் விவரம் சொல்லிட்டு குடும்ப டாக்டர் சாலினியின் மருத்துவமனைக்கு சென்றனர்.

டாக்டர் பரிசோதனை செய்துவிட்டுஏம்மா லட்சுமி உனக்கு வித்தியாசமா எதுவும் தெரியலியா..குழந்தை மூவ்மெண்டே இல்லியே என்று கூற யசோதாவிற்கு முகத்தில் பயம் தொற்றிக்கொண்ட்து.  இல்லியே டாக்டர் கொஞ்ச நேரம் முன்னாடி கூட வலின்னு சொன்னாளே..சாலினி அல்ட்ராசவுண்ட் எடுத்துப்பார்த்தவாறே நான் சந்தேகப்பட்டது சரிதான். குழந்தை மூவ்மெண்ட் திடீர்னு நின்னுபோச்சு. உடனே ஆபரேசன் செய்யனும். இல்லாட்டி உசிருக்கே ஆபத்து என்றவாறே டாக்டர் ஆபரேசனுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்ய சென்றுவிட..யசோதாவின் முகத்திலோ கவலையும்பயமும் மாறிமாறி காணப்படகண்ணன் செய்வதறியாது மாப்பிள்ளை ராஜேசிற்கு போனில் விவரம் கூறிக்கொண்டிருந்தார்.

நீங்க ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க மாமா. செலவ பத்தி கவலை இல்ல.  ரெண்டு பேருக்கும் எந்த ஆபத்தும் இல்லாம காப்பாத்த சொல்லுங்க.  நாங்க அடுத்த விமானத்தில் வந்திடறோம்.

மருத்துவமனையில் நுழையும் சம்பந்தி வீட்டாரைக் கண்ட கண்ணன் வாங்க மாப்பிள்ளைசம்பந்தியம்மா வணக்கம் எப்படி இருக்கீங்க..?? ம்ம் இருக்கோம்.. நீங்க குழந்தை பெத்தவங்கதான..?? புள்ள மூவ்மெண்ட் இல்லாததக்கூட கண்டுபிடிக்க தெரியாதா என்ன யசோதாவிடம் சம்பந்திக்கே உரிய தோரணையில் கமலா வினவ.  டாக்டர் என்னதான் சொல்றாங்க...??

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆபரேசன். எனக்கு ஒன்னுமே புரியல யசோதா கண்கலங்க.. அதற்குள் சாலினி யசோதாவிடம் பாருங்கம்மா ரெண்டு உசிரையும் காப்பாத்த முயற்சி பண்றோம்.  ஆனா ஒரு உசிருக்குத்தான் உத்தரவாதம் கொடுக்க முடியும் என்றவண்ணம்ராஜேசிடம் விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிய சாலினியிடம், டாக்டர் என் மனைவிய எப்படியாச்சும் காப்பாத்துங்க. கண்கள் பணிக்க வேண்டினான். நம்பிக்கையோட இருங்க.  என்னால ஆன முயற்சிய செய்யறேன். மத்தது கடவுள்விட்ட வழி என்றபடியே ஆபரேசன் தியேட்டருக்குள் நுழையும் சாலினியையே வெறித்துக் கொண்டிருந்தாள் யசோதா.  அனைவரும் அவரவர் மனதில் தோன்றிய இறைவனையெல்லாம் வேண்டிக்கொள்ள குழந்தை வீறிட்டழும் சத்தம் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில்...

செவிலித்தாய் குழந்தையை குளிப்பாட்டி எடுத்து வரவாடிய முகத்துடன் வெளிவந்த சாலினி யசோதாவிடம் மன்னிச்சுக்கோங்கம்மா எங்களால உங்க மகள காப்பாத்த முடியல..குழந்தைய மட்டுந்தான் காப்பாத்த முடிஞ்சுது” அய்யோ என்ற அலறலுடன் உள்ளே நுழைந்த யசோதா  மகளைக் கட்டிக்கொண்டு கதறினாள்.

நிரந்தரமாய்க் கண்மூடியது தன் தாயென்றறியாமல் அழகாய் ரோசாப்பூவை துணியில் சுற்றியதுபோல் குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை யாருமே கவனிக்கவில்லை. பிறந்தது ஆணாபெண்ணா என அறியும் ஆவல் கூட இல்லாமல் அனைவரும் லட்சுமியைக்கண்டு கதறிக்கொண்டிருந்தனர்.

யசோதா தன் மகளின் குழந்தை என்னவாயிற்று என பார்க்க எத்தனிக்க..உறங்கும் அதன் அழகில் ஒரு நிமிடம் தன்னை மறந்தவள் கையில் குழந்தையை வாரி மாப்பிள்ளையிடம் கொடுக்க..அய்யய்யோ..யாருக்கு வேணும் இந்த சனியன்.. பொறக்கும்போதே அம்மாவையும் தூக்கிடுச்சி.  எமனோட வந்த இது ராசி எம்பையனையும் ஏதாச்சும் செய்திடும் எங்களுக்கு வேண்டாம்.. ராஜேஷ் நீ இதத்தொடாத..வெறுப்பை வார்த்தைகளாய் வீசும் கமலாவின் பேச்சில் துடித்துப்போன யசோதா, “என்ன மாப்பிள்ளை இப்படி அமைதியா இருக்கீங்க..இவ உங்க இரத்தம்..உங்க வாரிசு..

ஓ பெண் குழந்தையா...இத காலம் பூரா வச்சி என்ன செய்யறது..பூனைய மடில கட்டி சகுனம் பார்த்தமாதிரியில்ல இருக்கும்..என் லட்சுமியே போயாச்சு எங்க அம்மா சொல்றதுதான் சரி....இவ தரித்திரம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ யார் கண்டா..குழந்தையை பார்க்கக்கூட மனமில்லாமல் வெறுக்க..

அதற்குள் கண்ணன் ஆகவேண்டிய கார்யங்களுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வரமருத்துவமனையிலிருந்து நேரே மயானத்திற்கு சென்று எரித்துவிட்டு வந்தாகிவிட்டது..

எழவு வீட்டுல சொல்லிக்க கூடாது என்று புறப்பட்டனர் ராஜேஷ்கமலாரமணி மூவரும். ரமணி என்ற ஒரு மனிதர் அந்தக்குடும்பத்தில் பெயரளவில் கணக்குக்கு மட்டுமே என்பதையறிந்த யசோதா எதுவும் அவரிடம் கூறாமல் இவர்களிடம் நியாயம் கேட்க அவர்களோ..முடியவே முடியாது நீங்க குழந்தைய வளர்ப்பீங்களோ இல்ல அனாதை விடுதியில் சேர்ப்பீங்களோ என்ன வேணா செய்துக்கோங்க.

ஆவேசமான யசோதா...என் பேத்திய எதுக்கு அனாதை விடுதியில் விடனும்..தாத்தாபாட்டி நாங்க இருக்கிறவரை அவளை பொக்கிசமா பாதுகாப்போம். எந்தக்குழந்தைய அனாதைவிடுதியில் சேர்க்க சொன்னீங்களோ அவ கிட்ட நீங்க வந்து ஒரு வார்த்த பேசமாட்டமாபார்க்கமாட்டமானு ஏங்குறமாதிரி தரணியே அவ புகழ் பாட வளர்த்துக்காட்டறேன். நீங்கதான் படித்தும் முட்டாளாகமூடப்பழக்கத்துக்கு ஆளாகிப்போய் அறிவிழந்தா நாங்களும் அப்படியே செய்வோமா என்ன..இறப்பு மாத்தமுடியா இயற்கைன்னு தெரிஞ்சும் அதுக்கு காரணம் சொல்லி பச்ச மண்ணு மேல பழியப்போடற உங்கள மாதிரி ஆளுங்க எத்தன நூற்றாண்டு ஆனாலும் திருந்த மாட்டீங்க..

பாட்டிதாத்தாபணம் வசதி இருக்கிற என் பேத்திக்கே இந்த நிலைன்னா. வசதியும் இல்லாமபாதுக்காக்க யாரும் இல்லாத அம்மா இழந்துத் தவிக்கும் குழந்தையின் கதியென்ன..??  ஆவேசம் அடங்காதவளாய். கூடாது அப்படி ஒரு நிலை இனி யாருக்கும் வரக்கூடாது என முணுமுணுத்தவாரே... ஒரு ஆசிரமம் துவங்கி பாதிக்கப்பட்ட குழந்தைகளை தன் பேத்திகளாய் வளர்க்க முடிவெடுத்தபடியே வீட்டிற்குள் தன் பேத்தியை அழைத்துச் சென்றாள். மகாலட்சுமியே என் பேத்தி உருவுல வந்திருக்கு. பலபேர வாழவைக்கத்தான் உங்க அம்மா உன்ன பூமியில் கொடுத்துட்டு போயிருக்கா. குழந்தையை கொஞ்சத்துவங்கினாள் யசோதா..!!!

ராஜேசின் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது யசோதாவின் அறைகூவல்... ஹலோ...யாரோ அழைப்பதை உணர்ந்து உணர்விற்கு திரும்பியவன்... தன்னையழைத்தது ராகினி என அறிந்து நினைவுகளிலிருந்து மீண்டவன், கல்லூரி விழா பற்றி கூற தனது பணிக்குறிப்புகளை பார்வையிட்ட ராகினி..மன்னிக்கனும் மிஸ்டர்.ராஜேஷ் அதே நாளில் எனக்கு மனிதநேயம் கற்பித்த என் பாட்டி துவங்கியுள்ள ஆதரவற்றோர் இல்லத்தின் ஆண்டுவிழா.. அந்தநாளில் நான் எந்த நிகழ்விற்கும் செல்வதில்லை. அப்பா என அழைக்கவேண்டியவள் இன்று மிஸ்டர் என அழைத்தது, தான் மறந்த மனிதநேயத்திற்கு கிடைத்த சாட்டையடியாய் நினைத்து இயந்திரமாய் பேச நாவெழாமல் வெட்கி வெளியேறினான்...!!