நானும், கடவுளும்...
இடம் மயான பூமி:
நான் : இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.. வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..
நான் : இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.. வேண்டியபடியே சற்றே தூரத்தில் விலகி நிற்கிறேன்..
கடவுள்: நகைக்கிறார்..
நான் : ஏன் நகைக்கிறாய்..??
கடவுள் : நாளை இறக்கப்போகும் நீ, இன்று இறந்தவனின் ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறாய்..
நான் : ஏன் அதில் என்ன தவறு..??
கடவுள் : நீயும் இங்கே வரவேண்டும்..அதைப்பற்றி நினைத்ததுண்டா..??
நான் : என்னிக்கோ வரவேண்டியதைப் பற்றி இன்றே ஏன் கவலைப்படவேண்டும்..? நினைத்துப்பார்த்தால் பயம்தான் மிஞ்சும்..
கடவுள்:எப்ப பயமில்லாமல் இருப்பாய்..?
நான் : அதற்கு என்ன அவசரம்..இன்னும் அனுபவிக்க எவ்வளவோ இருக்கே…??

கடவுள் : சரி இரண்டுவருடத்தில் வருகிறாயா..?
நான்: என் குழந்தை, கணவர் இவர்களெல்லாம் தவிப்பார்களே..?
கடவுள்: ஐந்து ஆண்டுகளில் வருவாயா..?
நான்: என் குழந்தைக்கு படிப்பு, திருமணம் இதெல்லாம் பார்க்காமல் நானெப்படி உன்னையடைவது..?
கடவுள்: குழந்தையின் திருமணம் முடித்தவுடன் வருகிறாயா..??
நான் : பேரக்குழந்தைகள் காணவேண்டுமே..??
கடவுள் : ஆக உனக்கு இங்கு வர விருப்பமே இல்லை..சரிதானே..??
நான் : நான் மட்டுமா அப்படி..உலகமே அப்படித்தானே..? யாராவது இங்கு விருப்பப்பட்டு வருவார்களா....??
கடவுள் : அதாவது உண்மையை ஏற்கும் மனம் இல்லை
அப்படித்தானே..??
நான் : எந்த உண்மை..?
கடவுள் : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் அதை அடைந்தே தீரணும்..இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க மறுப்பதேன்..?
நான் : எந்த உண்மை..?
கடவுள் : மரணம் என்பது நிச்சயம்..எவ்வளவு தள்ளிப்போடினும் அதை அடைந்தே தீரணும்..இங்கு வந்தே ஆகவேண்டும் என்ற உண்மையை ஏற்க மறுப்பதேன்..?
நான் : பயம் தான்..
கடவுள் :உண்மையைக் கண்டு பயப்படுது ஏன்..?
நான்:எனக்குப்பிறகு எனது குடும்பம்..?
கடவுள் : இப்பொழுது அனைத்தும் உன்னால்தான் இயங்குகிறதா..? உன் குடும்பத்தின் இயக்கத்திற்கும் நீதான் காரணமா..?
நான் : அப்படியில்லை..இருப்பினும், என்னை இழந்து வாடும் என்
குடும்பத்தாரை நினைத்து....
கடவுள்: நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள் மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?
கடவுள்: நீ இல்லாவிட்டாலும் உன் இழப்பை நீ செய்த நற்செயல்கள் மூலம் என்றென்றும் நினைவுகோறும் வகையில் செய்யமுடியாதா..?
நான்: --------
கடவுள் : ஏன் செய்யவில்லை..? எனக்குத்தான் எல்லாம் கிடைக்கிறதே..என்ற மெத்தனம்.. இறவா வரம் வாங்கிவிட்டது போல் பேரானந்தம்..வாழ்வின் மீது கொண்ட பேராசைதான் காரணமோ...?
நான் :சற்றே கோபமுடன்..யாருக்குப்பேராசை..? எனக்கா..??
எனக்கா..??
கடவுள்: ஆம்..
நான்: கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும், அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..??
கடவுள்: ஆம்..
நான்: கிடையவே கிடையாது.. நான் இல்லாவிட்டாலும், அகிலத்தையே இயக்கும் நீ என் குடும்பம் காக்க மாட்டாயா என்ன..??
கடவுள் : அப்படியென்றால் உனக்குபேராசையோ, பயமோ
கிடையாது..அப்படித்தானே..??
நான்: ஆம். எனக்குப்பயமில்லை. ஏன் இப்பொழுதே வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை. உன்னை சரணடைகிறேன் சஞ்சலமின்றி.
நான்: ஆம். எனக்குப்பயமில்லை. ஏன் இப்பொழுதே வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்னுயிரை. உன்னை சரணடைகிறேன் சஞ்சலமின்றி.
கடவுள் : உன் துணிவிற்கு மகிழ்ந்தேன்.உன் இறுதியாசையும் கூறு நிறைவேற்றுகிறேன்.
நான்: திகட்ட திகட்ட அன்புசெலுத்தும் அன்புள்ளங்கள், மனிதநேயமே மகத்தானதென நினைக்கும் மனிதர்கள், எங்கும் பசுமை நிறைந்து செழுமையான நாட்டில் வஞ்சம், பொய், வன்முறையற்று அகிலமே மகிழ்ச்சியில் திளைக்கவேண்டும் நிறைவேற்றுவாயா என் இறுதி ஆசையை..??
கடவுள் : ஹஹஹா...
நான் : என்ன சிரிப்பு..உன்னால் முடியாதா..??
கடவுள்: இருப்பனவற்றையேத் திரும்ப வரமெனக் கேட்கிறாயே.. அதான் சிரித்தேன்..
நான் : குழப்பமுடன்..???
கடவுள் : நீ கேட்ட அனைத்தும் உள்ளது. அதனருமை உணராமல் அப்படியே அனாதரவாய் கிடக்கிறது. இ(உள்ளி)ருப்பதை உணர, உணரவேண்டியது உணர்த்தப்படும்.. உணர்ந்து என்னையடைவாய்...!!
நான்: உணர மறந்த உண்மையை உணர்த்தி எமை தெளிவுபடுத்திய என்இறைவா...!!! உனைவணங்குகிறேன். யாதுமானவனே, யாவரும் இதை உணர்ந்து திக்கெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க அருள்வாய்..
கடவுள்: அப்படியே ஆகட்டும்..
நான்: குழப்பம் தீர்ந்தவளாய்..மகிழ்ச்சியுடன்...
அக்கா...
ReplyDeleteஉரையாடலாய் அமைந்தாலும் நல்ல கருத்தை உரைக்க வைத்திருக்கிறீர்கள்.
அருமையான உரையாடல்.
தொடருங்கள்... தொடர்கிறோம்.
@சே.குமார்...நன்றி தம்பி.
Deleteசிறப்பான சிந்தனை! அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html
நன்றி தோழரே..
Deleteநல்லதொரு உரையாடல்... பாராட்டுக்கள்... நன்றி... (TM 1)
ReplyDelete