அழகுச் சிற்பமாய்
என்னை அறிமுகப்படுத்த..
அவன்
அறிவெனும் உளியால்
உடல்வருத்தி
செதுக்குகிறான்…….!!
இரவு பகல் பாராமல்
முன்னேற்றம்
சிந்திக்கும் அவனுக்குத்தான்
எத்தனை
பாசம் என்மீது..??
என் எழுத்தை
எட்டிநின்று ரசித்து..
வருந்தாமல் குறைசுட்டி
குன்றின்மீதான விளக்காய்
நான் ஒளிர..
தீக்குச்சியாய் எரிகிறான்....!!
அறிவுக்கண் திறக்க
எனை அறிவுறுத்தி
கோபத்திலும் பாசம்காட்டும்
குணாளனவன்...!!
வாழ்க்கைப்பயணத்தில்
வழிகாட்டி..
வழித்துணையாய் எனை
வட்டமிட்டு வழிநடத்தும்
வல்லவன்......!!
காதலை விதைத்து
காதலை அறுவடை செய்யும்
கலைஞன்…!!
அமைதியின் வலிமையை
அயராது போதிப்பான்...
அன்பிற்கிலக்கணமாய்
திகழ்ந்து
ஆளுமையில்
மன்னனாய் விளங்குவான்..!!
என்னை எனக்குணர்த்தி
முழுமையடைய
முழுமனதோடு போராடுபவன்..!!
எண்ணத்தில்
எண்ணும்போதே
எதிரே காட்சியளிப்பான்..
எங்கும் நிறைந்து
யாதுமாய் தோன்றி
எனை செதுக்கும்
சிற்பியவன்.......!!
சிற்பி கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
இதோ ஒரு நிமிஷம்!
மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
http://thalirssb.blospot.in
நன்றி தோழரே..தங்கள் தளத்தில்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்..
Deleteகவிதை வரிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது... பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி…
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !
வாங்க சகோ..நன்றி...”அப்படிச்சொல்லுங்க” பார்வையிடுகிறேன்..:)
ReplyDeleteசிற்பி... அழகாக செதுக்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி தம்பி..குமார்
Deleteசிற்பி யார்?
ReplyDeleteஏன் அமைதியின் வாசனை என்ற தலைப்பு?
புரிந்து கொள்ள ஆசை !
:))
வாங்க தோழர்...’அமைதியின் வலிமை”..
DeleteKAVITHAI THANAI VASIKKIREN KANSIMIDAMAL YOSIKKIREN KANIRODU YASIKKIREN....KAVITHAIN KATHALAN
Delete