பிறவித்தோட்டத்தின்..
வாழ்க்கைப்பயணத்தில்
நட்பெனும் விதைவிதைக்க...
நட்பெனும் விதைவிதைக்க...
பூந்தோட்டமாய்
விளங்கும் பயணம்..
மணம் வீசி மனம் கவரும்
மல்லிகையும், மரிக்கொழுந்துமாய் சிலர்..!!
பறிக்கும்போது தைத்து
விளங்கும் பயணம்..
மணம் வீசி மனம் கவரும்
மல்லிகையும், மரிக்கொழுந்துமாய் சிலர்..!!
பறிக்கும்போது தைத்து
சூடும்போது மகிழ்ச்சியளிக்கும்
ரோசாமலருமாய் சிலர்..!!
ரோசாமலருமாய் சிலர்..!!
கண்கவர் கனகாம்பரமுமாய் சிலர்..
மணமில்லாவிட்டாலும்
மலருக்கான அழகுதான் குறையுமா....?
குளிர்ச்சியூட்டும்
தாமரையாய் சிலர்..!!
மலர்களோடு
கனிகளும் கனிந்திருக்கும் தோட்டத்தில்..
சுவையூட்டும்
வாழையும், பலாவுமாய் சிலர்.....!!
மணமில்லாவிட்டாலும்
மலருக்கான அழகுதான் குறையுமா....?
குளிர்ச்சியூட்டும்
தாமரையாய் சிலர்..!!
மலர்களோடு
கனிகளும் கனிந்திருக்கும் தோட்டத்தில்..
சுவையூட்டும்
வாழையும், பலாவுமாய் சிலர்.....!!
இனிப்பும்,புளிப்பும் கலந்த
மாங்கனியாய் சிலர்...!!
தலைமுறை தாண்டி பலனளிக்கும்
பனையும், தென்னையுமாய்
நீண்ட பயணத்தில் துணையாய் சிலர்...!!
பனையும், தென்னையுமாய்
நீண்ட பயணத்தில் துணையாய் சிலர்...!!
கசந்த வேம்பின் சுவைதவிர்த்து
குணம் விரும்ப
குளிர்ச்சியூட்டி, இதமளிக்கும்
தென்றலாய் சிலர்...!!
என் தோட்டத்தில்
விதவிதமாய் கனிகளை விளைவித்து
மலர்களை மலரச்செய்த
நட்புகளுக்கு......
நன்றியெனும் நீரூற்றி..
அன்பெனும் எருவுஞ்சேர்த்து..
அழகிய மலர்ச்செடியை
நட்பின் தோட்டத்தில்
நானும் பதியமிடுகிறேன்.. ....!!!
சிறப்புக் கவிதை... பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
afa daa!
ReplyDeleteவணக்கம் தோழரே...வருகைக்கு நன்றி
Delete