முகப்பு...

Wednesday 29 June 2011

இயற்கை சீற்றம்!!!



பிள்ளையிடம் சினம் கொள்ளும்
அன்னையை,
இதுவரைக் கண்டதில்லை நம் பூமி.....
இயற்கை அன்னையே,
உனக்கு ஏன் இந்த கோவம்
எங்கள் மீது?


பால் அருந்தும் குழந்தை,
தன் தாயின் மார்பகத்தை
கடித்துவிட்டால் வலியை
பொருட்படுத்தாமல்,
குழந்தைக்கு பாலூட்டுவது
தாயின் குணம்.....
கடித்தது குற்றமில்லை.....
அறியாமல் செய்த பிழை.





மனிதர்கள் பூமித்தாயை மாசு படுத்தி
குற்றம் புரியவில்லை.....
விளைவு அறியாமல் விளையாட்டுத்தனமாய்
உன்னை மாசு படுத்தும்
உன் பிள்ளைகளை மன்னிக்கக் கூடாதா?

அவர்கள் நீர்நிலையை,
மாசுபடுத்துகிறார்கள்.....
மரங்களை வெட்டுகிறார்கள்.....
அதிக அளவில் வேதியப் பொருட்களை,
பயன்படுத்துகிறார்கள்......


அதற்காக.....
அவர்களை இப்படி
சூறாவளியாகவும்,
சுனாமியாகவும்,
வெள்ளமாகவும்,
எரிமலையாகவும் .....
உருவெடுத்துத் தாக்குவது
முறையா??



அன்னையே!!!
சாந்தி அடைவாய்.....
அன்னையைக் காக்கும் பொறுப்பை
உன்  பிள்ளைகளும் உணர்ந்து விட்டார்கள்.....





எங்கும்
இயற்கை வளமுள்ள,
அமைதியான பூமித்தாயாக,
அமைதியுடன் காட்சியளிப்பாய்.....




2 comments:

  1. அமைதித் தாயை ஆக்ரோசத் தாயாய் மாற்றிய பெருமை நமது மக்களையே சாரும். தப்பு செய்தவர்கள் யாராகினும் தக்க தண்டனை அடைவது உறுதி. இதில் இயற்கையோடு தான் நாம் இணைந்து செயல்பட வேண்டும்

    ReplyDelete
  2. உண்மைதான் பாலா...இயற்கையோடு தான் நாம் இணைந்து செயல்பட வேண்டும். செயல்படுவோம்..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__