முகப்பு...

Tuesday 21 June 2011

வட்ட மேசை மாநாடு





வட்ட மேசை மாநாடாம்
நட்சத்திர விடுதியில்...

அலங்கார விளக்குகள்
ஆடம்பர மேசை, நாற்காலிகள்....

வண்ண வண்ண
ப் பூக்களால் 
அலங்காரம்...

அடுக்கடுக்காய் அலைபேசியின்
அழைப்புகள்...

கணினியில் கருத்துப் பரிமாற்றம்

ஒருவாய் நீரருந்த ஒரு பாட்டில் நீரை
விரயமடிக்கும் வினோதமான நாகரீகம்...
வித  விதமான உணவு வகைகள்
பேருக்கு சுவைக்கப் பட்டு 

கொட்டப்படுகிறது உண்பாரற்று....?!


விலை உயர்ந்த உணவும் 
வீணாகிறது வீதியில்...
வீதியோரக் குழந்தைக்கு
விதி உணவளிக்கிறதோ...?!


விரும்புவோருக்கு  இல்லாமல்,
குப்பைக்கு உணவளித்துக்
குளிரும்  மனப்பான்மை......

பலவிதமான மனிதர்கள்,
காலத்தின் அருமையறியாமல்,
காத்திருக்கும் கணவான்கள்...

காக்க வைத்தவரும் அறியவில்லை,
காத்திருப்பவரும் அறியவில்லை..
காலத்தின் அருமையினை..

காக்க வைப்பதும், காத்திருப்பதுமேதான்
நாகரீகமோ?!

6 comments:

  1. நம்முடைய நாகரீகத்தில் உணவு முக்கிய இடத்தை வகிக்கிறது. எந்த ஒரு விழாவானாலும், கூட்டமானாலும், குடும்ப விழாக்களானாலும் அங்கே விருந்து என்பது நமது சிறப்பான நாகரீகம். ஆனால் இன்று பொருளாதாரத்தை அதிகம் செலவழித்து செய்யப் படும் உணவுப் பொருள்கள், மேலைநாட்டு நாகரீக இடைச்செருகலால் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் மேம்போக்காய் சாப்பிடுவாதாய் காட்டிக் கொள்வதுதான் நாகரீகம் என்ற தவறான நினைப்பில், அனாவசியமாக உணவை வீணாக்குகிறோம். இது அறிவுக் குறைபாட்டைத் தவிர வேறெதையும் காட்ட வில்லை. இனியேனும் சிந்திப்போம். நல்லப் பதிவிட்டமைக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
  2. இன்று பொருளாதாரத்தை அதிகம் செலவழித்து செய்யப் படும் உணவுப் பொருள்கள், மேலைநாட்டு நாகரீக இடைச்செருகலால் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் மேம்போக்காய் சாப்பிடுவாதாய் காட்டிக் கொள்வதுதான் நாகரீகம் என்ற தவறான நினைப்பில், அனாவசியமாக உணவை வீணாக்குகிறோம்.

    --------சரியாக சொன்னீர்கள் நண்பரே! இனியாவது இந்த எண்ணம் மாறினால் சரி...

    ReplyDelete
  3. அருமை ...... தோழா ... உங்கள் படைப்பு மிக அருமை .

    ReplyDelete
  4. அருமை ...... தோழா ... உங்கள் படைப்பு மிக அருமை .

    ReplyDelete
  5. சமூக சீர்கேடுகளை நன்றாக உற்று நோக்கியுள்ளீர்கள் என்றே கருதுகிறோம். உங்களின் இந்த பார்வை நல்ல விழிப்புணர்வையும் வழிகளையும் காற்றும் என்றும் ஆணித்தரமாக நம்புகிறோம். தொடருங்கள் தொடருங்கள்

    ReplyDelete
  6. பாலா உங்கள் ஊக்கத்திற்கு நன்றி..

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__