இது அவசியமா..?? இப்படி செய்வதன் காரணம்தான் என்ன..?
முன்பெல்லாம் ஓரிரு இனிப்பு வகைகள், இரண்டு வகை கரி, கூட்டு, பச்சடி, சாம்பார், ரசம் போன்ற அத்தியாவசிய உணவு வகைகள் விருந்தில் இடம்பெறும். விருந்து கொடுப்பவர் ஒவ்வொருவரையும் அணுகி எப்படி இருக்கிறது, நன்றாக சாப்பிடுங்கள் என அன்புடன் விசாரித்து உபசரிக்க அனைவரும் உண்ட மகிழ்வு ஒருபுறமும், உபசரித்த விதத்திலான மகிழ்வு ஒருபுறமுமாக மனநிறைவுடன் செல்வார்கள்.
இன்று, விருந்திற்கு வந்தவரை உபசரிக்கவும் ஆட்கள் கிடையாது. உண்டனரா எனக் கேட்கவும் ஆட்கள் கிடையாது. அவரவர் எது வேண்டுமோ போட்டு சாப்பிடலாம். சாப்பிட்டாரா இல்லையா என்றும் கூட அழைத்தவர்க்கு தெரியாது. எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என முடிவு செய்ய முடியாத அளவிலான உணவு வகைகள். இது யாருக்காக...?
சராசரியாக ஒரு மனிதன் தன் வயிற்றிற்கு எவ்வளவு உணவு சாப்பிட முடியும்..?? தாங்கள் அதிக வகையிலான உணவுவகைகள் வைத்திருப்பதால் அனைத்தையும் சாப்பிட முடியுமா..?? சரி என்னவென்று பார்க்கலாமே என்ற எண்ணத்தில் எடுக்கப்படும் உணவுகள் எச்சிலிலையில் ஏராளமாக குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றது. இது யாரை யார் திருப்தி செய்யவதற்கான ஏற்பாடு..?? உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் உங்கள் இல்ல விழாவில் கலந்துகொள்ளத்தானே வருகின்றனர் அல்லது உங்கள் வீட்டு விருந்தில் எவ்வளவு வகையான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன என்பதை பார்க்கவா..??
உங்கள் உடைகளையும், உணவு வகைகளையும் பார்த்துதான் மற்றவர்கள் உங்கள் தரத்தை எடை போடவேண்டுமா..?? அப்படி உங்களுடைய ஆடைகளுக்காகவும் ஆடம்பரமான உபசரிப்புக்காகவும் மதிப்பவன், நாளை உங்களைவிட அதிக ஆடம்பரமாக ஒருவன் உபசரிக்கத் துவங்கினால், உங்களை மறந்துவிடுவான் தானே..?? அப்படியிருக்க, தற்காலிகமாக ஒரு சில நாட்கள் கிடைக்கப்போகும் அல்லது உங்களைப் பற்றி விமரிசையாக பேசப்படும் ஒரு நிகழ்விற்காக இத்துனை ஆடம்பரம் தேவைதானா..?? ஏன் இந்த மனோநிலை..??
மேல்தட்டு நாகரீகமாக மட்டும் இருந்து வந்த இந்தப் பழக்கம், இன்று நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் பரவுகிறது. தங்களால் இயலாவிட்டாலும் ஒருவரைவிட ஒருவர் அதிகம் செய்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு ஈடுகொடுக்க முயற்சி செய்கிறார்கள். பாசம், அன்புப் பகிர்வதில் போட்டியிடலாம். ஆடம்பரத்திலும் இந்த போட்டி தேவையா..?? சில தவிர்க்க இயலாத சந்திப்புகளில் எனில் சரி. ஆனால் இதையே வழக்கம் என மாற்றிக்கொண்டு வரும் நபர்கள் சற்றேனும் சிந்திப்பார்களா..??
இன்று உங்கள் இலையில் அதிகமாக அல்லது நாகரீகம் எனக்கருதி உங்களால் சுவைக்கப்படாமலேயே விரயமாக்கப்படும் உணவு எத்துனை பேரின் வாழ்வாதாரமாக அமையும் என்பதை ஏன் சிந்திக்கத் தவறுகிறோம்.?
இனியாவது யார் என்ன நினைப்பார்களோ என்பதற்காக இல்லாமல் நான் இதைச்செய்வதனால் பலர் பயனடைகிறார்கள் என்ற நோக்கில் நம் மன திருப்திக்காக மனிதம் கடைபிடித்து ஆடம்பரம் தவிர்த்து வாழத்துவங்குவோமே..!!
மாற்றம் என்பது அதிசயத்தக்க வகையில் நிகழாது. நாமாக துவங்குவதுதானே மாற்றம். முதலில் நமது இல்லத்தில் இருந்து துவங்கலாமே. நமது இல்ல விழாவில் ஆடம்பரமும், விரயமும் தவிர்த்து நிகழ்த்திக் காட்டுவோம். வயிற்றுக்குத் தேவையானவற்றை விருந்தளித்து மனமாற அன்புசெலுத்தி மகிழ்விப்போம். ஆடம்பரம் மட்டுமே விரும்பி, நம்மை நாலு பேர் இகழ்ந்து பேசுவதனால் நாம் தாழ்ந்துவிடப்போவது இல்லையே.. பத்து பேருக்கு உண்டான உணவை விரயத்திலிருந்து காப்பாற்றின மனநிறைவே போதுமான மகிழ்வை அளிக்கும். அதை அனுபவித்து உணர்வோம்.
"நாம் இன்று உண்ணும் உணவிற்காக என்றோ உழைக்கத்துவங்கியவன் விவசாயி..
நாம் உண்ணும் இந்த வேளையில் அவன் உண்டானா...
பட்டினியில் சுருண்டு உறங்கினானா...?? அறியோம்” :(:(:(
அவன் வாழ மனதார வாழ்த்துவோம்..
அவன் வாழ நாம் வாழ்வோம். நாம் வாழ அவன் வாழ்வான். வாழ்க வளமுடன்.
உண்மைதான் ஆடம்பர விருதுகள் தவிர்க்கப் பட வேண்டும்! இதுபற்றி நானும் ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ஓல்டு ஜோக்ஸ் 2
http://thalirssb.blogspot.in/2012/09/2.html
நன்றி தோழரே...நல்லது எழுதுங்கள். நம்மால் இயன்ற வரை இணைந்து செயல்படுத்துவோம்.
Deleteஇன்றைய சூழலில் அனைவரும் நிச்சயம்
ReplyDeleteஅறிந்து கொள்ளவேண்டிய விஷயமிது
அருமையான விரிவான பதிவுக்கு
ம்னமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி தோழரே.. நமது இல்லங்களில் இதுபோன்ற விரயங்கள் நடக்காமல் தடுப்போம்..
Deleteநல்ல கட்டுரை அக்கா.
ReplyDeleteஆனால் எங்கள் பகுதியில் இன்னும் விருந்து உபசரிப்பு அப்படியேதான் இருக்கிறது என்பதில் சந்தோஷமே...
விருந்துக்கு வருபவரை வரவேற்ப்பதாகட்டும்... அவர்களை பந்தியில் உபசரிப்பதாகட்டும் இன்னும் சந்தோஷமாக தொடரத்தான் செய்கிறது...
பப்பே முறை சாப்பாடு மேல் தட்டு மக்களிடம் இருந்தாலும் நடுத்தர வர்க்கம் இன்னும் அன்பில்தான் வாழ்கிறது.
சமையல் காரரிடம் பந்தியில் தம்பிக்கு கொஞ்சம் மோர் விடுங்க என்று விருந்து வைத்தவரின் சார்பாக அவரின் உறவினரோ நண்பரோ உபசரிக்கும் போது ஏற்படும் மன நிறைவு நாமே எடுத்து சாப்பிடுவதில் கிடைப்பதில்லை அல்லாவா.
உண்மைதான் தம்பி அதில் உள்ள மகிழ்ச்சி அதிகப்படியான உணவு வகைகள் சாப்பிடுவதில் இருப்பதில்லை..உணர்ந்தால் மகிழ்ச்சியே.. நகரத்தில் நடுத்தர மக்களும் இதை கடைபிடிக்கத் துவங்குகிறார்கள்.
Deleteஉண்மைதான் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் அடங்கியிருக்கிறது..
ReplyDeleteஒரு வேளை உணவுக்காக கஷ்டப்படும் எத்தனையோ ஜீவன்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன..
எம் ஒரு வேளை உணவை உண்ணும் போதாவது இந்த உணவு கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்று ஒரு முறையாவது சிந்தித்திருப்போமா...
ஆம் தோழரே..தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி
Deleteஎல்லோருமே இப்படி ஒரு ஆடம்பரதில் சிக்கி கொள்கிறார்கள்... மற்றவர்களை விட நாம் சிறந்த உணவு அளிக்க வேண்டுமென்று நினை வகை வைப்பது இப்போது தொடர்ந்து கொண்டு வருகிறது முன்பெல்லாம் இட்லி பொங்கல் இது தான் காலை உணவு ஆனால் இப்போது... என்ன என்னமோ வைகிறார்கள்..
ReplyDeleteஇருப்பவன் வைத்து விடுவான் இல்லாதவன்..??
உண்மைதான் தம்பி.
Deleteஆடம்பர விருந்துகள் - சில பேர்கள் செய்வதைப் பார்த்தால் பத்து கல்யாணங்கள் நடத்தி வைக்கலாம்...
ReplyDeleteஇவை தான் இன்றைய நாகரீகமாம்...
//சில பேர்கள் செய்வதைப் பார்த்தால் பத்து கல்யாணங்கள் நடத்தி வைக்கலாம்...// வருத்தமான உண்மை சகோ
Delete