கடிந்த தாயிடம்
செல்லும் பிள்ளையாய்
விலக்கினாலும்,
விலகினாலும்
உனையே சுற்றும் மனம்..
*********
குழந்தையிடம்
விரும்பித்தோற்கும்
அன்னையாய்
அறிந்தே முட்டாளாகிறேன்..
நீ அறிவாளி
என்ற பெருமிதத்தில்...!!!
*********
என் எண்ணங்களை
எழுதிவிட
என்னவன் இதயமிருக்க
எனக்கெதற்கு
எழுத்துக்குறிப்பேடு...??
**********
நல்ல சிந்தனை வரிகள்... அருமை...
ReplyDeleteநன்றி சகோ..:)
Deleteஆமா இப்பவெல்லாம் இதயத்துல எழுதுறாங்க.. பின்னாடி இதயத்தையே பறித்துக் கொண்டு போகிறாங்க... எழுதினது தேவப்படுமென்று
ReplyDeleteநல்ல கவிதை
ஹஹ....தோழரே..நன்றி
Deleteசிந்தனை சிறப்பு தோழி
ReplyDeleteதோழியின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்..
Delete