அன்புக்குரியவர் மீது நாம் கொள்ளும் கோபம்கூட மயானபூமியில் கிட்டிய ஞானமாய் நீர்த்துப்போய் விடுகிறது விரைவில்
---காயத்ரி.
*******
நாம் செலுத்தும் அன்பை ஏற்கும் மனநிலையில் ஒருவர் இல்லாதபொழுது அவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு அவரின் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது
---காயத்ரி
*******
ஒரு நேரம் மனதைப் புரிந்தவர்களாக விளங்குபவர்கள் கூட,
ஒரு நேரம் புதிராக காணப்படுவதுதான் மனிதனின் இயல்போ..??
---காயத்ரி
******
நம்மிடம் அனைவரும் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், அனைவரிடமும் உண்மையாகத்தான் இருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கத் தவறுகிறோமே ஏன்....!!??
--- காயத்ரி
******
ஒருவர் நம்மிடம் உண்மை பேசும்போதுதான் (அது கசந்தாலும், வலித்தாலும்) அவர் நமக்கு வகுத்த எல்லை என்ன என்பதையறியவும்,நாம் எந்த எல்லையில் இருந்துவருகிறோம், அந்த எல்லை சரிதானா என்ற சுய பரிசோதனை செய்துகொள்ளவும் உதவுகிறது.
---காயத்ரி.
******
அழகான அர்த்தமுள்ள பொன்மொழிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி தோழரே..:)
Deleteநல்ல தத்துவங்கள் அக்கா.
ReplyDelete:)மகிழ்ச்சி தம்பி..
Deleteஅருமை...
ReplyDeleteமிகவும் பிடித்தது :
/// நம்மிடம் அனைவரும் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், அனைவரிடமும் உண்மையாகத்தான் இருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கத் தவறுகிறோமே ஏன்...? ///
// நம்மிடம் அனைவரும் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், அனைவரிடமும் உண்மையாகத்தான் இருக்கிறோமா//
ReplyDeleteஒழுங்காக என் வலை பூவிற்கு வந்து எதாவது கருத்து சொல்லணும்.ஏன் என்றால் நான் உங்கள் பதிவிற்கு வந்து கருத்து சொல்லியிருக்கிறேன்.
வாங்க தோழர்...இப்படி மிரட்டி சொன்னா கருத்திடாம இருக்க முடியுமா..அவசியம் பார்வையிடுகிறேன் தங்கள் வலைப்பூவை
Deleteஉங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு.
ReplyDelete