முகப்பு...

Thursday, 13 September 2012

நடைபாதை...!!


காவல்காரனில்லா
நீண்ட நெடிய மாளிகை..
இரவும், பகலும் ஒளிவீசும்
செலவில்லா
நிரந்தர விளக்குகளாய்
சூரியனும், சந்திரனும்...

குளமாய்த் தண்ணீர் தேங்கியிருக்க...
குளியரைத் தேவையில்லை..

ஒரு குடம் நீரில்
வாழ்வியலை கற்பிக்கும்
தண்ணிலாரியிருக்க
குடிநீர்க்கட்டணம் தேவையில்லை..

வீதியோரம் இறைந்துகிடக்கும்
செல்வங்கள்..
சேமிக்க வங்கியில்லை..

சாலையோரம் மலர்ந்திருக்கும்
மலர்கள்..
மணம் உணர மனமில்லை..

இந்தியாவின் அடையாளச்சின்னம்
ஆதரிப்பாரற்று..

எதிர்காலத்தூண்கள்
எடுத்து நிறுத்த ஆட்களில்லை
இவர்கள்தாம் நடைபாதை வாழ்
ந(க)ரகத்து  வாசிகள்...!!!

8 comments:

  1. நடைபாதை வாசிகளை சிறப்பாக படம் பிடித்துகாட்டும் அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    சரணடைவோம் சரபரை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும், நன்றியும் தோழரே..

      Delete
  2. வீதியோரம் இறைந்துகிடக்கும்
    செல்வங்கள்..
    சேமிக்க வங்கியில்லை..

    சாலையோரம் மலர்ந்திருக்கும்
    மலர்கள்..
    மணம் உணர மனமில்லை..

    ----------


    அருமையான வரிகள் அக்கா...
    அழகா சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  3. அமைதியாய் இருப்பதனாலேயே..
    அடிமைப் படுத்தி இரசிப்பதுமேனோ.....??
    அருமையான வரிகள் தத்துவ சிந்தனை

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__