முகப்பு...

Tuesday 14 August 2012

தாயுமானவள்...!!!



தாயென அழைக்க சூலில்
தவம் நீயிருந்து
வரமெனக்கு அளிக்க
தரணிக்கு வந்தவளே....

யானையின் மணியோசையாய்
வருமுன்னே
வம்சத்திற்கு மகிழ்ச்சியை
வழங்கிய(குப)வளே..

புவிதொடுமுன்
பூலோகம் கேட்டு ரசித்த
உன் குரல்
இசைக்கிறது காதினிலே....

மலரான நின் மென் தேகத்தின்
முதல்தீண்டலில்
பட்டாம்பூச்சியாய்
பறந்ததென்மனமே.....

நீ சுவைத்த 
கொங்குமெனக்கு
பெண்மையின்
பெருமையுணர்த்த...

உனைசன்னல்வழி
நோக்கியநின் தந்தையுமே..
புன்னகையில் பூரிப்பை புலப்படுத்த...

நீ கொடுக்கும் மகிழ்ச்சிதனை
வர்ணிக்கும் வார்த்தையில்லை
நானறிந்த மொழிதனிலே....

படிக்கும் வேளையிலே
கலைமகளாய் காட்சியளித்து.
வினாவாயிரம் எழுப்பி
விடையறியாமல்
விழிக்குமெனை
வினோதமாய் பார்த்து ரசிப்பவளே..

என் எழுத்தின்
ரசிகையாக...
அறியாமை விளக்கும்
ஆசானாக....
துள்ளித்திரிந்து விளையாடி
தோழியாக..
அம்மாவென்றழைத்து
மகளாக மகிழ்வித்து...

பிணிகொண்ட வேளையில்
செய்த பணிவிடையால்
நின் தாய்க்கு தாயாகி..
தாயின் பிரதிபிம்பம்
மகளென உணர்த்தியவளே..!!

யாதுமாய் விளங்கி
யாவற்றையும் வழங்குபவளே..
வசந்தத்தை வாரிவழங்கும்
வண்ணமலரே..
தாயுமானவளே
உனை வாழ்த்துகிறேன்.....!!



12 comments:

  1. சிறப்பான கவிதை...

    நல்ல வரிகள்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி சகோ..:)

      Delete
  2. Replies
    1. நன்றி தோழமையே..தங்களின் தொடர்ந்த வருகை ஊக்கமளிக்கிறது..

      Delete
  3. அக்கா...
    தாயுமானவள் வரிக்கு வரி தாய்மையின் பிம்பமாய் சிரிக்கிறாள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி..மகளுக்காக முயற்சித்தது..:)

      Delete
  4. யாதுமாய் விளங்கி
    யாவற்றையும் வழங்குபவளே..
    வசந்தத்தை வாரிவழங்கும்
    வண்ணமலரே..
    தாயுமானவளே
    உனை வாழ்த்துகிறேன்.....//

    மிக மிக அருமை
    ஒவ்வொரு வரியையையும் படிக்கப் படிக்க
    எம்முள்ளும் பாசத்தின் ஊற்று
    பொங்கிப் பெருகுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழரே...உங்களது கருத்தும் எமக்கு ஊக்கமளிக்கிறது..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்..

      Delete
  5. அழகான கவிதை.....
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. "நீ சுவைத்த
    கொங்குமெனக்கு
    பெண்மையின்
    பெருமையுணர்த்த...


    உனைசன்னல்வழி
    நோக்கியநின் தந்தையுமே..
    புன்னகையில் பூரிப்பை புலப்படுத்த..."

    என்னவொரு யதார்த்த அனுபவ வரிகள்... மழலையின் மகிழ்வை அனுபவித்த ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும் இந்த வார்த்தையின் ஆழங்கள்... Great

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழரே...மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு..தொடர்ந்த வருகை தாருங்கள்.

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__