முகப்பு...

Thursday 2 August 2012

கால சுழற்சி.....!!!


அமைதியான மையிருட்டு வேளையில்
ஆதவனின் உறக்கத்திலே..    
மலரத் துடிக்கும் மொட்டுக்கள்
காதலனுக்காக காத்திருக்க....!!

இயற்கைசூழ்ந்த பூமிதனை..
மரம் காக்கும் மனிதம் மெச்சியே
குளிர்விக்க எல்லையில்லா மகிழ்ச்சி
கொண்டே..
வர்ணனும் வஞ்சப்புகழ்ச்சியில்
வார்த்தையில் விளையாடுகிறான்..

அதிகாலை அமைதிபோக்கி
அலரும் வாகனம்...
சேவல் கூவிய இடத்திலே
கடிகாரத்தின் கூக்குரல்..

சாணம் தெளித்த வாசலும்
சிமெண்ட் பூச்சில் மறைந்திருக்க..
சுப்ரபாதம் ஒலித்த வீடுகளில்
நடிகையுடன் நேருக்கு நேர்...

சாம்பிராணி மணம் வீசிய
வீடுகள்..
செயற்கைத் திரவியத்தில் மணக்க..

வேம்பின் தென்றல் தழுவிய மேனியை
குளிர்சாதனத்தின் குளிர் தீண்ட..

நீராகாரத்தில் தொடங்கிய காலை
காஃபியிலும், தேனீரிலும் துவங்க..

பழைய சாதம், வெங்காயம்..
அவிச்ச இட்லி, மல்லி சட்னியென
மணத்த காலைஉணவு..
மைதா ரொட்டியில் துவங்க...

வயிறைக் குளிர்வித்த
மண்பானைத் தண்ணீரோ..
பல்கூசி உடல் சூடுண்டாக்கும்
குளிர்பதனப்பெட்டியியிலே...

வாழையில் மடித்த மதிய உணவும்..
நெகிழிப்பைக்கு நிரந்தர அடிமையாக...

நிதானமாய் நகர்ந்த நாட்களுமே
நிற்க நேரமில்லாமல் ஓட..
எதை நோக்கியிந்த ஓட்டம்..
எங்கேயிந்த ஓட்டம்..
எவருமறியா ஓட்டமிது...
நாய் அறியா வேலையாய்...
நகருகிறது நாட்களுமே..!!!

எண்பதிலும் துள்ளித்திரிந்தவர்கள்..
ஐம்பதில்கூட உதவிக்கு ஆள் அழைக்க...
எருமையில் வந்த எமனுமின்று..
வாகனத்திலும், நோயிலும்
உருமாறி தன்நிறமாற்றி
எள்ளிநகையாடியே எடுத்துச்செல்கிறான்
எளிதாக...!!!
காலத்தின் சுழற்சியில் கற்றதுதான் என்ன...??



4 comments:

  1. காலத்தின் சுழற்சியை சித்தரித்த விதம் அருமை! கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
    http: thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும், கருத்துக்களும் ஊக்கமளிக்கிறது..மகிழ்ச்சி தோழரே...

      Delete
  2. Replies
    1. அதுதான் வேண்டும் சகோ..
      கற்றது அன்பெனில் கொடுப்பதும் அதுவாகத்தானே இருக்கும்..மகிழ்ச்சி சகோ..இக்கால சுழற்சியில் இழந்ததும் அன்பைத்தான்..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__