முகப்பு...

Thursday, 1 March 2012

நீதி.....??



புதிர்களின் பிறப்பிடம்...
புதிரான வழக்கில்..
புதிர்களாய் வாதங்கள்..
புரிந்துகொள்ள முடியா தீர்ப்புகள்..
 




புதிர்களைச் சுமக்கும் பணமுமங்கே
புதிர்களை விடுவிக்கவும் செய்யுமே...!!!
தவறுக்குத் தண்டனையா..??
தண்டனைக்குப் பின் தவறா...??
 

நீதிதேவதையுமங்கே
கண்கட்டி ஆட்சி செய்கிறாள்...
அவள் கண் திறக்கும்

சாதனமாய் பணமுமங்கே ...!!
கையில் தராசு
பணத்தை அளப்பதற்கோ....!!???

வேடிக்கையான சட்டமுமிங்கே
வாடிக்கையாகிப் போகுது...

இலட்சம்  திருடியவனுக்கு.
மரண தண்டனை...!!
இலட்சம் கோடி திருடியவனுக்கோ
வசதிகள்...வாய்தாக்கள்...!!


இன்னல் தாங்க முடியா
தற்கொலை முயற்சிக்கு
கிடைக்குமே தண்டனை...!!
ஏமாற்றுக்காரனுக்கோ
விடுதலை..!!

மரணத்தை எதிர்க்கும்
சட்டமுமிங்கே..
மரணதண்டனையும்
விதிக்குதே....!!! 



தீவிரவாதத்தை எதிர்க்கும் சட்டமுமே
தீவிரவாதிகளுக்குத்
தள்ளிவைக்குமே தண்டனையை...

புரிந்துகொள்ள முடியா சட்டமுமே
புத்திகள் பல புகட்டுமே நமக்கு...!!

சாட்சிக்கு சென்றவனையுமே
சாடுமிந்த சட்டமுமே...

விசித்திரமான சட்டமுமே
பலர் வாழ்விலும் விளையாடுகிறதே....

இருப்பதை
இல்லையென்றும்
இல்லாததை
இருப்பதாகவும்
மாற்றுமிந்த சட்டம்.....!!

நீயுமே
சட்டத்தை நாடுவது
சொத்தையும், சுகத்தையும்
இழப்பதற்கா...??

பாட்டாளிக்குதவா சட்டமுமே
பணம் படைத்தவனுக்கே உதவுதே...

ஏழைக்குதவா சட்டமுமே

இருந்தென்ன லாபம்...??























4 comments:

  1. ஏழைக்குதவா சட்டமுமே
    இருந்தென்ன லாபம்...??///

    அதானே... நல்லா ஏக்கம் உள்ள கவிதை.... :))

    ReplyDelete
  2. @சௌந்தர்....தம்பி நல்வரவு...நம்மால் ஏங்க மட்டும்தான் முடிகிறது..மாற்றுவது எப்போதோ...??

    ReplyDelete
  3. கையில் தராசு
    பணத்தை அளப்பதற்கோ....!!???

    இதுவரையிலும் எவரும் சிந்திக்காத கோணம்... இந்தக்கவிதையின் கோபத்தில் உங்கள் எண்ணங்கள் முழுவதுமாய் வார்த்தைகளில் வந்து விழவில்லை... இதுபோன்ற கவிதைகளில் வார்த்தைக்கு வார்த்தை ஒரு நெருப்பு இருக்கவேண்டும்... எழுதச்சிந்திக்கும் போது சட்டத்தின் மீதான உங்கள் ஆழ்மன கோபங்களை இன்னும் சுதந்திரமாய் உலவ விட்டிருந்தால் கவிதை இன்னமும் வெகுசிறப்பாய் இருந்திருக்கும்... அதற்காக இந்தக்கவிதையை சிறப்பில்லை என்று கூறவில்லை... இதுவும் சிறப்பே...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழமையே..ம்ம்..உண்மைதான்..இப்பதான் எழுதப்பழகுகிறேன்..நிச்சயம் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்..அவசியம் எங்கு குறையிருப்பினும் சுட்டிக்காட்டுங்கள்..நன்றி.:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__