முகப்பு...

Sunday 4 March 2012

மரணித்த மனிதம்...


என்னவளைக் காணவில்லை...
எங்கு தேடியும் கிடைக்கவில்லை..
ஏதுமறியா குழப்பத்தில் எனை மறக்க..

அயராது முயற்சித்தும்..,
அவள் குரல் கேட்கவில்லை அலைபேசியில்..

அண்டை அசலாரும் அறியவில்லை..
அறியாக்குழந்தையாய் நானும்...
மௌனம் எனை மிரட்ட...

காவல்துறையே
கண்கண்ட தெய்வமென
நாடிச்செல்ல

நிம்மதியற்ற மனமோ.,
மனதினில் மன்னிப்புக் கோற..   
உறக்கமிழந்த கண்ணுக்கு..
நிலவும் சூரியனாய்ச் சுடுகிறதே...!!

அலைபேசியலற...
அனாதைப் பிணத்தை அடையாளம் காட்ட
அழைத்தபடி காவல்துறை....

நெஞ்சும் பதறுது..
தேகமும் நடுங்குது...
கைநடுங்கி, கால்தடுமாற..
பூமியும் சுற்றுதிங்கே...
பூகம்பத்தை சந்திக்க நானும் தயாராய்...!!!

நண்பனின் தயவால்..
நடைதொடர...
வெள்ளைத் துணி விலக்கி விசாரிக்க..
அஞ்சி நடுங்கி,
அலறுவதற்கு எத்தனிக்கும் மனம்...

விலக்கிய வெள்ளை துணிக்குள்...
வேறொரு பெண்....!!

என்னவள் இல்லையிவள் என
மனம் குதூகளிக்க………….:):)..

மற்றொருவளின் சாவுக்கா
மகிழ்ந்தது என் மனம்..!!??
என் மனிதமிங்கே மரணிக்க..
வெட்கமுடன் நான்...!!


2 comments:

  1. விலக்கிய வெள்ளை துணிக்குள்...
    வேறொரு பெண்....!!


    என்னவள் இல்லையிவள் என
    மனம் குதூகளிக்க………….:):)..


    மற்றொருவளின் சாவுக்கா
    மகிழ்ந்தது என் மனம்..!!??
    என் மனிதமிங்கே மரணிக்க..
    வெட்கமுடன் நான்...!!

    சான்சே இல்லைங்க.... அருமையான கரு... சாதாரணமாய் போன கவிதை இறுதியில் இதயத்தை தொடுவது படைப்பின், படைப்பாளியின் தனித்திறன்... Great work friend.. Happy to read this...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழமையே..தங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சியூட்டுகின்றன..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__