முகப்பு...

Wednesday 21 March 2012

நாளைய நம்பிக்கை...!!!

மனதாளும் மன்னவனே...!!
நீயும் நானுமான வாழ்வில்
உன்னில் எனைத் தொலைத்து
என்னில் உனைத்தேடி..
எனக்கும் உனக்குமான பந்தத்தில்..

அழகில் முருகனாய்
அறிவில் குருவாய்
ஆற்றலில் அனுமனாய்
ஆன்மீகத்தில் ஞானியாய்..
இசையில் இராவணனாய்..
இலக்கியத்தில் சிலப்பதிகாரமாய்...

ஈகையில் கர்ணனாய்..
உபதேசிப்பதில் கீதையாய்.
உண்மைப் பேசுவதில் அரிச்சந்திரனாய்..
ஊக்கத்தில் கிருஷ்ணனாய்..
ஊரில் காசியாய்..

எதிர்ப்போருக்கு வாலியாய்..
எப்பொருளிலும் மெய்யாய்...
ஏற்றங்களில் மலையாய்..
ஐம்பூதங்களில் அக்னியாய்..
ஐம்புலனடக்கத்தில் முனிவனாய்..
ஒழுக்கத்தில் இராமனாய்..
ஓவியம் தீட்டுவதில்  ரவிவர்மனாய்...
ஔவியம் பேசாதவனாய்..

கவியில் கம்பனாய்..
குறியில் அர்ச்சுனனாய்..
சாதுர்யத்தில் சாணக்கியனாய்..
ஞானத்தில் சம்பந்தனாய்

தர்மம் காப்பதில் தர்மனாய்...
தூய்மையில் அன்னமாய்..
நட்பில் அதியமானாய்..
பக்தியில் பிரகலாதனாய்..
பாசத்தில் பரதனாய்...
மன்னிப்பதில் கடவுளாய்..

யவனத்தில் மன்மதனாய்...
ரகசியத்தில் பிரம்மமாய்..
லட்சியத்தில் முனைப்பாய்..
வள்ளலில் பாரியாய்..
விவேகத்தில் விதுரனாய்..
வீரத்தில் கட்டபொம்மனாய்..

விளங்க பொக்கிசமான மகவை..
நானும் ஒற்றைப் பிள்ளையாய்
ஈன்றெடுக்க...
எனை பூமித்தாயும் பொறாமையுடன்
நோக்க...!!

இயற்கையும்,
தேவர்களும்
மும்மூர்த்திகளும் ஆசீர்வதிக்க..
அவன் என்றும்
இறவாத் தன்மையுடன் விளங்கி
அவனில்
உன் பெயர் தழைக்க வேணுமாய்
இந்தக்காதலியின்
சின்ன சின்னப் பேராசை............!!!












17 comments:

  1. எல்லாமும் நீயியாகி...அருமை காயத்ரி..

    ReplyDelete
  2. arumai kayu vivarika varthaye illai...

    ReplyDelete
  3. சின்னக் காதலியின் சின்ன ஆசைகள் இறவாத் தன்மையுடன் விளங்கும் உன்னத ஆசைகள் உயர்ந்தோங்கும் ஆசைகள் இயற்கையும்,
    தேவர்களும், மூர்த்திகளும் ஆசீர்வதிக்க.. ஆசிர்வதிக்கட்டும். கலக்குறீங்க காயு வார்த்தைகளைத் தேட வேண்டும் போல

    ReplyDelete
    Replies
    1. மும்மூர்த்திகளின் ஆசிகளோடு பாலா போன்ற நட்புகளின் அன்பும் கிட்டட்டும்...:):)

      Delete
  4. அக்கா...
    சின்ன பேராசையின்னு சொல்லிட்டு எம்புட்டு ஆசை...
    ஆஹா... அருமையான வரிகள்...
    கவிதையில் வார்த்தைகள் ஜாலம் செய்கின்றன...
    அழகான கவிதை... அடிக்கடி எழுதுங்க...

    ReplyDelete
    Replies
    1. @சே.குமார்...நன்றி தம்பி..நிச்சயம் எழுதுவதற்கான என் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும்...:)

      Delete
  5. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் தோழரே..

    ReplyDelete
  6. Akka really superb ka , arumai arumai athunai varigalum ;) ;) ;) ;)

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தம்பி..வருகைக்கும், கருத்திற்கும்..:)

      Delete
  7. அன்பின் கவிக் காயத்ரி - நாளைய நம்பிக்கை - கவிதை அருமை - பிறக்கப் போகும் / பிறந்த ஆண் மகன் எப்படி எல்லாம் வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற தாயின் கனவுகள் - கவிதை வடிவில் ஜொலிக்கின்றன

    நட்பிறகு இலக்கணம் அதியமானா ? அல்ல அல்ல - துரியோதணன் நட்பின் இலக்கணம்.

    அதே போல் வீரத்திற்கு கட்ட பொம்மன் அல்ல அர்ச்சுணன் சரியான தேர்வு - சுட்டிக்காட்டப் பட்ட அனைவருமே கதாபாத்திரங்கள் - கட்டபொம்மன் வரலாற்று நாயகன். பூமியில் உயிருடன் வாழ்ந்தவன் - அர்ச்சுணனே சரியான தேர்வு

    மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா...தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..:) திருத்திக்கொள்கிறேன்.._/\_

      Delete
  8. வித்தியாசமான கவிதை.ரசிக்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)

      Delete
  9. wow இவ்வளவு ஆசைகளா ம்...ம்
    எண்ணமெல்லாம் ஈடேற வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிக்க மகிழ்ச்சி...தங்கள் வாழ்த்திற்கும், வருகைக்கும்..:) __/\__

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__