முகப்பு...

Saturday 17 March 2012

ஊஞ்சல்.... ..

பூங்காவில் ஊஞ்சலாடும் ஆசையில்
வயது மறந்த மனம்....
அக்கம்பக்கம்
எவருமில்லையென அறிந்து
விருப்பப்பாடலை மனதுள் முணுமுணுத்து
விசிலடித்த மனம்.....

ஊஞ்சலின் வேகம் அதிகரிக்க
சுற்றம் மறந்து....
விரும்பியவனுடன்
பாடுவதாய் எண்ணி வாய்விட்டுப் பாட..
குழந்தையாய் குதூகலிக்கிறது மனம்..

தோழியுடன் தோட்டத்து மரத்தில்
ஊஞ்சல் கட்டி விளையாடியது...

தோளோடு தோள் சேர்த்து
கட்டுக்கதை பேசியது.

கூட்டமாய் கூடி
கூட்டாஞ்சோறு செய்தது..

பச்சிலை,செங்கல்,காபித்தூளில்
வண்ணம் தயாரித்தது..

அம்மா அறியாமல்.,
அஞ்சரைப்பெட்டி மஞ்சள்தூளில்
வண்ணம் செய்தது..

நெற்றிக் குங்குமத்தில்.,
சிவப்பு வண்ணப் பொடி செய்து...
அம்மா திட்டியதும்.,
அழுவதுபோல் நடித்தது....

பருமடைந்த பெண்ணைப் போல்
எழுத்தில் கூற முடியா
பல எண்ணங்களாய் மனம்...

வயது மறந்த பரவசத்தில்...

வீடு செல்லும் உணர்வில்
வேகத்தைக் குறைக்க....

ஊஞ்சல்
தன்னிடத்தை அடைகிறது..
நானும்
என்னிடத்தே வருகிறேன்..

இரட்டையைச் சார்ந்தே
வாழ்க்கையென
உணர்த்தும் ஊஞ்சல்..

மேலும், கீழும்...
முன்னும், பின்னும்...
இன்பமும், துன்பமும்
இணைந்த வாழ்வில்..

துன்பத்தைக் கண்டு துவளாமல்..
முதுமையிலும் குழந்தையாய் மாறும் மனம்.
அதைக் குழந்தையாய் காண்பதும்,
முதியதாய் காண்பதும் உன் கையில்.....!!!







2 comments:

  1. அருமையான எழுத்து நடை... அழகான வார்த்தைக்கோர்ப்பு... இளவயதில் செய்த கூட்டாஞ்சோறு, வண்ணப்பொடிகள்... அதுவும் செங்கல்லைப் பொடியாக்கி வண்ணம் தயாரிப்பது...
    ''ஊஞ்சல்
    தன்னிடத்தை அடைகிறது..
    நானும்
    என்னிடத்தே வருகிறேன்''
    வித்தியாசமான உணர்வுகளை உண்டாக்கும்... எழுதியவர்களால் மட்டுமே உணரக்கூடிய மனதைத்தொட்ட வரிகள்... அருமையான கவிதை... மிக்க நன்றி...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__