முகப்பு...

Monday 26 March 2012

திருமண விலங்கு....!!!


இருமணம் இணையுமாம் 
திருமணத்தில்..!!
என்னவென்றுணரும் ஆசையில் சிலர்..
எதுவாயினும் வேண்டாமென சிலர்..
விருப்பும், வெறுப்பும் உணருமுன்  சிலருக்கு.

விரும்பிய வாழ்வு சிலருக்கு
விரும்பா வாழ்வு சிலருக்கு..
விரும்பிய வாழ்வு 
விரும்பாமல் போவது சிலருக்கு 
விரும்பாத வாழ்வை 
விரும்பி ஏற்க வைப்பது சிலருக்கு..

விரும்பாத வாழ்வை விரும்பியேற்க
வைக்கும்  வீணர்களின் விடாமுயற்சியில் சிலர்...

விரும்பாமல் விரும்பிய வாழ்வில்
விருப்பமில்லா விருந்தாளியாய்
வந்த குழந்தைக்காய்..
விரும்பாத வாழ்வை விரும்பி ஏற்கும் சிலர்..

திருமண விலங்கை விரும்பி ஏற்கும் சிலர்..
திருமணத்தால் விலங்காய் சிலர்...
பணயக்கைதியாய் சிலர்...

விலங்கை விடுவிக்க நினைப்போர் சிலர்..
விலங்கை விடுவிக்க நினைப்போரை
வினோதமாய் விமர்சிப்பவர்கள் பலர்...

திருமண பந்தத்தில்
ஆயுட்கைதியாய் சிலர்...

ஆயுட்கைதியானவர்தாம்
ஆதர்ச தம்பதியாம்...!!

ஆயுள்முழுவதும் சுயமிழப்பதுதான்
ஆதர்ச தம்பதியோ...???!!!!


2 comments:

  1. விரும்பாமல் விரும்பிய வாழ்வில்
    விருப்பமில்லா விருந்தாளியாய்
    வந்த குழந்தைக்காய்..
    விரும்பாத வாழ்வை விரும்பி ஏற்கும் சிலர்..
    வெகு யதார்த்தமான வரிகள்... பலரது இன்றைய வாழ்க்கை இதுதான்...

    Co-incidently... நானும் இதேப்போல ஒன்று எழுதியிருக்கிறேன்.... நேரமிருந்தால் கொஞ்சம் படியுங்கள்...
    கதம்ப மாலை...: மீண்டு(ம்) எப்படி வாழ?-ஒரு சாதாரணமானவனின் க(வி)தை!
    http://jeevanathigal.blogspot.in/2011/07/blog-post_15.html#links

    ReplyDelete
    Replies
    1. பார்வையிடுகிறேன் தோழமையே..தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__