முகப்பு...

Monday 19 March 2012

பட்டுப்போன பச்சை மரம்….!!!



பருவமடைந்த நாள் முதலாய்
கனவுகளில் மிதந்து.,
காமம் தவிர்த்தக் காதல் கொண்ட மனம்...

உற்றார் உறவினர் மறந்து
உல்லாசமாய் சுற்றித்திரிய...
சாதியறியாக் காதலோ
திருமணத்தில் சாதிபார்க்க...
காதலுமங்கே கனவாய்ப் போகவே...

இருபத்தைந்தில்
அவளும்
வாழ்க்கைப் பந்தயத்தில் போட்டியிட...

ஜாதகமும் சாதகமற்று
சதி செய்ததே...!!

கொடுக்கமுடியா வரதட்சிணையும்
வயதைக் கூட்ட..

அந்தஸ்தோ அவள் கனவின்
அஸ்திவாரத்தையே தகர்க்க..

முப்பதை தொட்டுவிட
மூப்பும் அவளை எட்டிப்பார்க்க..,
வயதும்
அவள் வசந்தத்திற்குத் தடையானதே...!!

படிப்பில் மற(றை)ந்த காதலும்
காதலில் மற(றை)ந்த காமமும் சோதிக்க..
அவள் காதலை செலுத்தி
காமத்தைப் பகிர்ந்து
கற்பனையை ரசித்து
கைப்பக்குவத்தை ருசித்து 
அவளைப் பாராட்டி..
அவள் தாலாட்டி மகிழ
பொக்கிசமாய் பிள்ளை வரமளிக்கும் 
மன்னவனுக்காய் ஏங்கும் மனம்...

அவதாரப் புருசன் வருவான்..
ஆதர்ச தம்பதியாய் வாழலாம்
மனமும் ஆசைப்பட...

ஆசைகளும்கனவுகளும் 
அடிமனதில் புதைந்துவிடவே..
ஊரார் கேளிப்பார்வையும் 
அவள் உள்ளத்தைத் துளைக்கவே..

காணும் வாலிபனெல்லாம்
வருங்காலக் கணவனாகமாட்டானா..??என உள்ளமும் ஒரு நிமிடம் செயலிழக்க...
கற்பனைக் கணவனை மனமும்
நித்தம் கட்டிப்பிடிக்க..
தலையணையும் கூறுமே 
அவள் தலையெழுத்தை...:(
அவள் வண்ணக் கனவுகளை
எண்ணமாக்கி வாழ்வளிக்க
மன்னவனும் வருவானோ.....!!??

இலையுதிர்க்கால மரமாய்..
இப்படியே இருந்துவிடுவாளா......!!??
வசந்தம் அவள் வீட்டை வந்தடையுமா...?? 
வசந்தத்தை நோக்கியே அவளும் வாசலிலே காத்திருக்கிறாள்....!!!





4 comments:

  1. கரு சிறப்பு... வார்த்தைக்கோர்ப்பு இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருந்திருக்கலாம் தோழி... கவிதையில் ஒரு ஃபீல் மிஸ்ஸிங்... நல்ல முயற்சி...

    ReplyDelete
    Replies
    1. தங்களது இந்த பின்னூட்டம் ஒரு நிறைவை அளிக்கிறது..குறை சுட்டிக்காட்ட மெருகேற்ற வழிவகுக்கும்..தங்கள் இக்கருத்தை மனதில் கொள்கிறேன்..முயற்சி செய்து சரி செய்கிறேன்..தொடரட்டும் தங்கள் ஊக்கம்..:)

      Delete
  2. பரவாயில்லை... எங்கே கோபம் கொள்வீர்களோ என்ற ஒரு தயக்கத்திலேயே இக்கருத்தை எழுதினேன்... நல்ல விதமாய் எடுத்துக்கொண்டு முயற்சிப்பதாய் கூறுவது நிச்சயம் உங்கள் எழுத்தை செழுமைப்படுத்தும்... வளர்க உங்கள் கவிகள்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி..நல்லதை ஏற்க ஏன் கோபப்படவேண்டும்.. தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்..நன்றி

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__