ஐந்தறிவாய் அறிமுகமான
வாயில்லா ஜீவன்களுமே
தன் வாரிசுகளைப் பேணிக்காக்க..
சிந்திக்கும் ஆற்றல் கொண்ட
சிந்தனைவாதி நீயோ...
வசதிகளுக்காக வாரிசுகளை
காப்பகத்தில் சேர்ப்பதாலே...
தாய்ப்பால் ம(றந்)றுத்து..
புட்டிப்பால் குடித்து..
விளையாட்டு சாதனத்தோடே
பழகுவதாலே....
பாசத்தையும் விளையாட்டாய்
கருதியே....
பண்பற்ற செயல்பாடுகளால்..
பெற்றோரைப் போற்றுவதுமெப்படி...
அரவணைப்பதும் எப்படி..??
அறியாதவர்களாய்...
வளர்ப்பதும்தான் யார் குற்றமோ...??
பிள்ளை வளர்க்க காப்பகத்தை
நாடியவர்களுக்காக....
பிள்ளைகளுமே
முதியோர் காப்பகத்தையும் நாடுகின்றனரே...:(:(
நாம் கொடுத்த கல்விதனை..
நமக்கே கற்பிக்க...
கற்றுக் கொடுத்தவர்களுமே...
கற்றுக்கொள்ளும் காலமும்தான் வந்ததே...!!
தாய் காட்டிய வழிதனிலே..
பயணிக்கும் பிள்ளைதனை
தரம் தாழ்த்திப் பேசுவதும் முறையோ....??
விதையினை விதைக்காமலே
கனியும்தான் கிட்டுமா......??
வாலிபத்தே சிந்திக்காமல்
வயோதிகத்தில் வருந்துவதால் பயனென்ன....??
குழந்தைகளைப் போற்றியே
பேரன்பைப் பரிசாய் அளிக்க..
பெற்றவர்களைப் பிள்ளைகளுமே
புனிதமாய் மதிக்கும்
காலமும்தான் வருமே....:):)
ஆஹா... Really Super... Every one should understand this.... Great words friend...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தோழமையே..:)
Delete