முகப்பு...

Wednesday 19 September 2012

உணவும், உணர்வும்....




பெண்கள் தினமும் மூன்று வேளையும் சமைத்து, பரிமாறுவதால் சிலநேரம் சாப்பாடு பார்த்தாலே முகத்தில் அடித்தாற்போல் சாப்பிட பிடிக்காமல் போய்விடும். இதை பலரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். சிலர் உணர்ந்தாலும் வேறு வழியில்லை என பசி பொறுக்காமல் சாப்பிடுவதும், சிலர் பசி பொறுத்து சாப்பிடாமல் இருப்பதும், சிலர் மாற்று ஏற்பாடு செய்வதுமாக இருப்பர். சிலருக்கு மாறுதலுக்காக யாராவது சமைத்துப் போடமாட்டார்களா என இருக்கும்.

திடீரென ஒரு சிந்தனை. சிலர் வீட்டில் சமையலுக்கு ஆட்கள் வைத்திருப்பார்கள்.  அவர்களிடம் இது இது தேவையென வேளா வேளைக்கு வகை, வகையாக கேட்டு சாப்பிடுவோம்.  ஆனால் தினமும் நமக்கு சமைத்துப்போடும் அவர்களுக்கும் இப்படித்தானே ஒரு உணர்வு இருக்கும் என என்றாவது அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து பார்த்திருப்போமா..??  அவர்களுக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என எண்ணி அவர்களையும் அமரவைத்து சாப்பிட்த்தான்  வைத்திருப்போமா..? ஒரு மாறுதலுக்காக ஒரு குறிப்பிட்ட நாள் அவர்களுக்கு தேவையானவற்றை கேட்டறிந்து சாப்பிட வைத்தால் எப்படி மகிழ்வார்கள். (எங்க வீட்ல வேலைக்கு ஆட்கள் வைக்கவில்லை. இது சிந்தனை மட்டுமே).

உணவு விடுதியில் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுபவர் சாப்பிடுவதைப் பார்த்தால் சற்று  பரிதாபமாக இருக்கும்.  ஏதோ சாப்பிடவேண்டுமே என ஒரு தட்டில் எடுத்துவைத்து ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிடுவார்.

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு உணவு விடுதியில்(சரியாக நினைவில்லை..) காலை உணவு சமைத்தவுடன் அந்த உணவு விடுதியின் உரிமையாளர் அனைத்து ஊழியர்களையும் சாப்பிடவைத்தபிறகே வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குவது வழக்கமாம்.  படித்த நினைவு.   எவ்வளவு நல்ல மனம் அந்த உரிமையாளருக்கு. ஊழியர்கள் மன நிறைவோடும், வயிறு நிறைவோடும் இருக்க அவர்களது உழைப்பு உள்ளப்பூர்வமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.   நாமும் சிந்திப்போமே.   நமக்குமே வீட்டில் அதிகப்படியான வேலை, ஒரே மாதிரியான வேலையினால் வரும் சலிப்பில் சிலநேரம் சிடுசிடுவென நடந்துகொள்வது வழக்கம்தானே.  அதே உணர்வு அவர்களிடமும் இருப்பதில் தவறில்லையே.   அவர்களது நிலையில் இருந்து சிந்திந்துப்பார்த்தால் மட்டுமே சில நபர்கள் ஏன் சிடுசிடுன்னு இருக்காங்கன்னு நமக்கே புரியவரும். நாமும் சிந்திப்போமா...
??


8 comments:

  1. நல்ல சிந்தனை
    நிச்சயம் எல்லோரும் அமல்படுத்தலாம்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே..நிச்சயம் செயல்படுத்துவோம்..

      Delete
  2. ஆமாங்க..சமைச்சா சாப்பிட முடிய மாட்டேன்குது...போனவாரம் இப்படிதான்..பிரியாணி, வருவல், குழம்பு அப்ப்டின்னு எவ்ளோ நான் வெஜ் செஞ்சோம்..ஆனா சாப்பிட முடியல...ஆனா நம்ம அம்மணி செம கட்டு...அவங்க எட்டி கூடபார்க்கலை..அதனால் தான்...

    ReplyDelete
    Replies
    1. @கோவை நேரம்..வாங்க தோழர்..ஹஹ்ஹ அது சரி..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__