முகப்பு...

Monday 3 September 2012

கருகும் மொட்டுக்கள்...

கட்டுரை எழுதிப்பழக விரும்பியதால் இந்த முயற்சி. குறையிருப்பின் தோழமைகள் சுட்டிக்காட்டி, கட்டுரை நடைபற்றிய தங்களது பார்வையைப் பகிரவும். நன்றி..
                                  ***********************************************


தீவிரவாதம்: அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதாக நினைத்து,மக்கள் சக்திக்கு எதிராக செயல்படும் இவர்கள், தனது கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கும் போராட்ட முறைகளின் அடிப்படையில் தீவிரவாதி,நக்சலைட்டு என அழைக்கப்படுகின்றனர்.

தீவிரவாதத்திற்கு நாடு,மதம்,இனம்,மொழி என எந்த வேறுபாடும் கிடையாது. அதற்கு தேவையானது பணம். பணத்திற்காக உயிர்ப்பலி மட்டுமே. பிறரின் உணர்வு, பந்தம் பாசம் என எதைப்பற்றிய கவலையுமின்றி எதையும் செய்யத் துணிந்தவர்கள்.

நக்சலைட்டுகள் நக்சலைட் என்பவர்கள் கம்யூனிசம் சார்ந்த ஒரு குழுவினர் சாரு மஜும்தார் மற்றும் காணு சன்யால் கம்யூனிஸ்ட் சேர்ந்தவர்கள் தொடங்கிய ஒரு குழுதான் அது என கூறப்படுகின்றது.அரசின் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் சார்ந்த பொதுவுடமை அமைப்பு என்று தன்னை கூறிக் கொண்டாலும்,ஊடகங்களால் தீவிரவாதிகள் என்றே அடையாளப் படுத்தப்படுகின்றனர். அரசை பொறுத்தவரை தங்களின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் அனைவரும் தீவிரவாதிகளே. இவர்கள் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறினாலும் பொதுமக்களும் பாதிப்படையத்தான் செய்கின்றனர். அப்படியெனில் இவர்கள் செயல் தீவிரவாதம் அன்றி வேறு என்ன..??
பின்னனி: தீவிரவாதத்திற்கான அடிப்படைக்காரணம் வறுமை,போதிய கல்வியறிவு இல்லாமை, வேலையின்மை போன்றவைதான். தனது படிப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் மூளை சலவை செய்யப்பட்டு தீவிரவாத கூட்டத்தினரால் மனம் கவரப்படுகிறான். சிலநேரம் அரசின் செயல்பாடுகளினாலோ,சமூகத்தாலோ பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன் தன்னார்வத்தோடு இச்செயலை கையிலெடுக்கிறான்.
படித்து பட்டம் வென்று அறிஞனாக விளங்குவான் என்ற இவனின் பெற்றோர்களது கனவு பகல் கனவாகவே பலிக்காமல் போய்விடுகின்றது. பணம்படைத்தவன் தன் நிலை தாழாதிருக்கவும்,அரசியல்வாதி தன் பதவியினை நிலையாக தக்கவைத்துக் கொள்ளவும் பின்னும் சதிவலையில் சிக்கிக்கொள்வதென்னவோ தீவிரவாதியென முத்திரை பெற்ற இவன்தான். சிலநேரம் விதியும் இவன் வாழ்வில் விளையாடத்தான் செய்கிறது. தனக்கான அங்கீகாரம் நிராகரிக்கப்படுவதால்,விதிவசத்தால் இச்சதிக்கு ஆளாகிறான்.யாரோ எங்கோ உல்லாசமாக இருக்க எமனோடு போராடுவதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்ட இவன் இவனையறியாமலேயே இரையாகி விடுகிறான்.

கோடி,கோடியாக வருமானம் வந்தாலும் இவன் அவ்வப்பொழுது காட்டினிலும் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறான். பலநேரம் அந்நிய நாட்டின் சதிக்கு ஆளாகி,விரும்பிய நேரத்தில் விரும்பிய வாழ்க்கை வாழமுடியாமல்,குடும்பம்,உறவு துறந்து இவன் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ளவும் செய்கிறான்.  விதியின் சதியால் தான் செய்த சதியில் இவனே சிக்கி அனாதைப்பிணமாய் எங்கோ மரணிக்கவா இப்பிறவி எடுத்தான்....??

இவன் செய்த சதியால் இவனது வாரிசுகளும் ஆயுதம் எடுப்பார்கள் அல்லது சதிக்கு ஆளானவர்களால் அழிக்கப்படுவார்கள் என்பதை அறியாதவனா..?அறிந்தும் அறியாதவனாய் இருக்கிறானே.....?

தன் கொள்கைக்காக தற்கொலைப்படையில் இணைந்து தன்னையே அழித்துக்கொள்ளவும் தயாராக இருக்கும் வலிமையான மனத்தை வாழ்வதற்காக பயன்படுத்தாமல் விரயமாக்குவது ஏன்..??

இவனது சதிச்செயலினால் வாரிசிழந்து வாடும் வயோதிகர்கள்,
கணவனையிழந்து நிர்க்கதியாய் நிற்கும் பெண்கள்,தாயிழந்து தவிக்கும் பால்மனம் மாறா பச்சிளங்குழந்தை.,தன் கோரிக்கைக்காக பணயக்கைதியாய் இவன் கொடுமைகளை அனுபவிக்கும் அரசு அதிகாரி என,பாரபட்சமின்றி பந்தபாசத்தின் ஆழம் அறியாமல் பலிவாங்கும் இவன் அகோர பசிகொண்ட அரக்கனோ....??

தீவிரவாத செயலினால் நம் உள்ளத்தை உருக்குலைத்து நம் நெஞ்சைவிட்டு நீங்காமல் இருக்கும் சில சம்பவங்கள் இங்கே ...

1.1993 மார்ச் 12 அன்று மும்பையில் நடந்த தொடர் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஆகவும்,காயமடைந்தோர் எண்ணிக்கை 750ஆகவும் அமைந்தது..

2. 1998 பிப்ரவரி 14 அன்று தமிழ்நாடு - கோயம்புத்தூரில் தீவிரவாதிகளால் பல்வேறு இடங்களில் பல்வேறு வாகன்ங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுமூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆகவும்,காயமடைந்தோரின் எண்ணிக்கை 200ஆகவும் அறிவிக்கப்பட்டது.

3. 2006 ஜூலை 11 அன்று மும்பை இரயில் மற்றும் இரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட 7 தொடர் குண்டுவெடிப்பில் 209 பேர் உயிரிழந்ததாகவும்,714 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் குறிப்பிட்டன.

4. 2011 ஜூலை 13 மும்பை ஒபேரா ஹவுஸ்,சாவேரி பசார்,தாதரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பின் எண்ணிக்கை 26ஆகவும்,காயமடைந்தோரின் எண்ணிக்கை 130ஆகவும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

5.2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நட்ந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் தோராயமாக 202உயிரிழப்பும்,காயமடைந்தவர்கள் 308மாக இருந்த்து..

6. 2012 ஆகஸ்ட் 1ம்தேதி,மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, பாலகந்தர்வ அரங்கத்தைச் சுற்றி, ஒரு கி.மீ., சுற்றளவிற்கு அடுத்தடுத்து நான்கு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இருந்தாலும், இந்த குண்டு வெடிப்புகளால், உயிர்சேதமோ, பெரிய அளவில் பாதிப்போ ல்லாவிட்டாலும் அச்சத்தையே விளைவிக்கிறது. (தினமலர் நாளிதழில் பதிவானது)


மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் பார்வையிடலாம். இங்கு கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் ஒரு சிறு எடுத்துக்காட்டே.. நக்சலைட்டு, தீவிரவாதியென பட்டம் பெற்று உலகத்தையே கலங்கடிக்கும் இவன்,இரயில் கவிழ்ப்பு, பேருந்தில் குண்டு,விமான கடத்தல்.,கட்டிடத் தகர்ப்பென விதவிதமாய் சதிசெய்து பலரின் உயிரை குடித்து பலரது வாழ்வு நாசமடையக் காரணமாகவும் விளங்கும் செயலினால் இவன் சாதித்ததுதான் என்ன...??
இப்படி தாய்ப்பால் குடித்த இவனுக்கு சகமனிதனின் குருதி சுவைக்கும்  எண்ணமும் வந்ததேனோ....??
வறுமை, சூழ்ச்சி, அரசியல்..
விதியென
சதிக்கு காரணம் கூறுபவன்......!!
மனிதனாகக் காரணம்
தேடாததேனோ........??
மலர்ந்து தன் தோட்டத்தில் மணம் வீசுவான் என்ற பெற்றோர்களின் கனவுமிங்கே இவனது சதிச்செயலினால்,மலராமலே கருகிய மொட்டுக்களும்தான் எத்துனை.எத்துனை...??
விதியின் விளையாட்டோ...??
வீணர்களின் சதியோ...
விழித்துக்கொள்வாய் வீரனே..!!
விழலாகி வீணாகிப்போகும் நின் வாழ்வை மணம் வீசி மலரச்செய்து மனிதம் காப்பாய் மானிடனே.......!!

12 comments:

  1. வேதனை தரும் சம்பவங்களின் தொகுப்பு...

    முடிவில் இரு வரிகளில் அருமையாக முடித்துள்ளீர்கள்...

    ReplyDelete
  2. Well said Gayathri..keep up the good work...ezhini@gmail.com

    ReplyDelete
  3. கட்டுரையை மிக மிக அழகாக எழுதியுள்ளீர்கள்
    நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டதைப் படித்தால்தான்
    புதிதாக எழுதுகிறீர்கள் எனத் தெரிகிறது
    பிரச்சனையை மிக அழகாக ஆழமாக விளக்கியுள்ளீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தோழி அருமை .........தேவையும் கூட இந்த தலைமுறையினருக்கு ......முறையற்ற வளர்ப்பு ன், நட்பு இவையால் அகம் தொலைத்து அலையும் விலங்குகள் அவர்களை எப்படி மனிதன் என்று சொல்ல

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழி..மனிதனாய்ப்பிறந்து விலங்காய் மாற்றப்பட்டவர்கள் மனிதனாக வேண்டும் என்றே விரும்புவோம்..:)

      Delete
  5. நல்ல முயற்சி... எழுதும்போது வாக்கிய நடையில்மட்டும் கவிதை நடை கலவாமல் பார்த்துக்கொண்டு முடிந்தவரை சாதாரண வாக்கியங்களைக்கோர்த்து எழுதுங்கள். அதுதான் கட்டுரைக்கான எழுத்து... மற்றபடி அனைத்தும் சிறப்பு... நிறைய கட்டுரை எழுத முயலுங்கள்... தானாகவே கட்டுரைநடை வரும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்..//கவிதை நடை கலவாமல் பார்த்துக்கொண்டு முடிந்தவரை சாதாரண வாக்கியங்களைக்கோர்த்து எழுதுங்கள்.// சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..கருத்தில் கொண்டு அடுத்த முயற்சியில் அப்படியே செய்கிறேன்..:):)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__