முகப்பு...

Tuesday 29 October 2013

விடியல்...!!

முழுமையடையா 
நித்திரைக்கு நிர்பந்தமாய் 
விடுதலையளித்து..
இன்னும் கொஞ்சம் உறங்கும்
ஏக்கத்துடன்...
கடிகார சப்தத்தை நிறுத்தி
நேற்றைய நிகழ்வுகளின்
நினைவுகளின் எச்சங்களோடு...
இன்றைய பொழுதின் 
எதிர்பார்ப்போடு
துவங்கும் விடிகாலைப்பொழுது...!

என்ன சமைப்பதென்ற 
சிந்தனையோடும்
ஒரு நிமிடமென சிணுங்கும் 
குழந்தையின் உறக்கம் களைக்கும்
போராட்டத்தோடு...
அலுவலகத்திற்கு
தயாராகவேண்டுமென்ற அவசரத்திலும்
அன்றைய களத்தில் 
இறங்கும் பெண்கள்..

ஞாயிற்றுக்கிழமையின் வரவை
எதிர்நோக்கி 
நாட்களை எண்ணியபடி
குழந்தைகள்...!

தாமதமாய் அலுவலகம் 
செல்வதைத் தவிர்க்க
மனதை(உறக்கத்தை) அடக்கி
எழமுயற்சிக்கும் ஆடவர்கள்...!

ஆரோக்கியம் கருதியே
உடற்பயிற்சி மேற்கொள்ள
உறக்கம் தவிர்த்தபடி இளைஞர்கள்...!

இன்றைய விடியல்
மரணத்தைவென்றதற்கான
வரமென மகிழ்ந்தபடி
வாழத்துடிக்கும் வயோதிகர்கள்...!

இன்னும் எத்தனை விடியலோ
சபித்தபடி நோயாளிகள்...!

எண்ணிலடங்கா
எண்ணங்களை எல்லாரிடத்தும்
பதியமிட்டே
நாள்தோறும் துவங்குகிறது 
அன்றைய விடியல்...!!!









10 comments:

  1. அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் அழகு.... வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

      Delete
  3. ஒவ்வொரு விடியலும் ஒரு கதை சொல்லும்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  4. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவிஞரே..தங்களுக்கும் எமது வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__