முகப்பு...

Monday, 28 October 2013

கோபம்

தன் கூரிய வார்த்தை வீச்சினால்
எதிராளியின் மனதை
குத்திக்காயப்படுத்தியும்...

விரல்களுக்கு அழகுசேர்க்கும்
தம் நகங்களைக் கடித்து
வழியும் குருதி கண்டும்..

பூவையரின் கூந்தலையோ
இல்லத்தையோ..
இறைவனையோ
கல்லறையையோ..
அலங்கரிக்கக் காத்திருக்கும்
அழகிய மலர்களின்
இதழ்களை உதிர்த்தெறிந்தும்..

யாருக்கோப் பயன்பட
தன்னைத் தயார்படுத்தியிருக்கும்
தாவரத்தினை துண்டு துண்டாக்கியும்...

அரிந்த காய்களின் தோல்களைப்
பல துண்டங்களாக்கியும்..

அடுக்களையில் ஆங்காங்கு
பாத்திரங்களின் ஓசையெழுப்பி
பாசமிக்கவர்க்கு உணர்வுகளை
வெளிப்படுத்தியும்...

பூமியை வெட்டி செதுக்கி
பண்படுத்தியும்...

வெங்காயம் நறுக்கிக்
கண்ணீர்த்திவளைகளை
கன்னங்களின் வழி செலுத்தியும்..

எவரும் அறியாது
கண்ணீரைத் தண்ணீரில்
கரைத்தும்..

எவர் மனதும் காயப்படாதிருக்க
மௌனத்தை
மொழியாய்க் கொண்டு
தன்னையே வருத்திக்கொண்டும்..

அன்றாட கோபங்கள்
கரைக்கப்பட்டும்
மறைக்கப்பட்டும்
இயன்றவரை இழப்புகளை
ஏற்படுத்தி
மனித மனத்தை
எரித்துச்செல்கிறது

இன்னொரு இழப்பிற்கு
எவரையோ தயார் செய்யவே..!!

16 comments:

  1. வணக்கம்

    இன்னொரு இழப்பிற்கு
    எவரையோ தயார் செய்யவே..!!

    கவிதையின் வரிகள் நன்று ரசித்தேன் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தன்னையே கொன்று விடும்........

    ReplyDelete
  3. சினம் எவ்வளவு கொடியது என்பதை கவிதை அழகாய்சொல்கிறது.

    ReplyDelete
  4. நயமான கவிதை!..

    அன்றாட கோபங்கள்
    கரைக்கப்பட்டால்
    மறைக்கப்பட்டால்
    எவருக்கும் இழப்பு இல்லை!..

    வாழ்க.. வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி..வாழ்க வளமுடன்

      Delete
  5. கோபத்தைப்பற்றி மிகவும் கோபமாகவே எழுதியுள்ளீர்கள். ;)

    அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__