சிந்தனைத் தோட்டத்தில்
விளையும்
எண்ணச் செடிகளின்
வார்த்தை மலர்களை
கோர்த்து
கவிமாலையமைத்து
தமிழன்னைக்கு சூட்ட விரும்பிய
முயற்சி.....
வார்த்தை மொட்டு கருகியும்
பறிக்கும்போது இதழ்கள் உதிர்ந்தும்..
கோர்க்கும்போது துண்டிக்கப்பட்டும்..
பறிக்கத்தவறிய மலர்களும்..
கவிமாலைக்கு அழகு
சேர்க்கும் மலர்களாம்
உவமையும்,உவமானமும்
கண்ணுக்கெட்டாது
கண்ணாமூச்சியாட
இருக்கும் மலர்களில்
கோர்க்கப்படும் மாலை
கவிமாலையாய் காட்சியளிக்குமா..?
காட்சிப்பிழையில்லையிது
கருத்துப்பிழையெனக் கருதியே...
நல்லதோர் கவிமாலையமைக்கும்
முயற்சி நாளும் தொடர்கிறதே...:)
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் அருமை ......முயற்சி என்நாளும் தொடர எனது வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தோழரின் வாழ்த்திற்கு நன்றி..
Deleteகலக்கல் கவிதை அக்கா...
ReplyDelete:) நன்றி தம்பி...
Deleteசிந்தனைத்தோட்டத்து மலரினை வார்த்தைச்சரமாக கோர்த்து நம் தமிழ் அன்னைக்கு கவிமாலையாக சூடமுயற்சிக்கும் தங்களைப்போன்ற கவிகளுக்காகவே தமிழன்னையானவள் மொத்தம் 247 அழகிய மலர்கள் தந்திருக்கிறள் அவைகள் கருகிடாமலும், உதிர்ந்திடாமலும், விடுபட்டுவிடாமலும் அழகான சரமாய் கோர்த்து, தமிழர்களாகிய நம்மீது அளவுகடந்த பாசமுடைய தமிழன்னைக்கு மாலை அணிவித்திட நினைக்கும் தங்களின் முயற்சி விரைவில் வெற்றிபெரும் நல்ல முயற்சி கவிதாயினி காயத்ரி அவர்களே வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் முயற்சியே தமிழன் என்னை மயக்குமளவிற்கு மணம் வீசுகின்றதே!!!
நிச்சயம் நம்மை ஈன்றெடுத்த நம் "தமிழ் அன்னை" கொடுத்துவைத்தவள்தான்.
ஹஹ..நன்றி ஆனந்த்..தங்களின் வாழ்த்திற்கு..
Deleteதொடரட்டும் உங்கள் முயற்சி.....
ReplyDeleteஎங்களுக்கும் தினம் கவிதை கிடைக்குமே!
நன்றி தோழர்..
Delete//கவிமாலைக்கு அழகு
ReplyDeleteசேர்க்கும் மலர்களாம்
உவமையும்,உவமானமும்//
கவிமாலை அழகோ அழகு ! பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் ஐயா.._/\_
Deleteதொடர்க! சித்திரமும் கைப்பழக்கம்! செந்தமிழும் நாப்பழக்கம்! எழுத எழுத சிறந்த படைப்பு உருவாகும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே.. தங்கள் அனைவரது வாழ்த்தும் எமது எழுத்துகளை சிறப்படைய செய்யட்டும்..:)
Delete