மனச்சிறையில்
மௌனமாய் வைத்த
வார்த்தைகள்...
அமைதிக்கெதிராய்
போராட்டம் செய்கிறது
விடுதலைவேண்டி..!!
வார்த்தையும் உணர்ச்சியும்..
மௌனமும் புத்தியும்..
எதிர் எதிர் பக்கத்தில்
நின்று நடத்தும் பட்டிமன்றத்தில்
வார்த்தை துறந்து
உணர்வுகள் விடுபட்டுக் கதறியழ விரும்பும்
உணர்வின் பக்கம் தீர்ப்பாக..
கண்ணீருக்கு விடுதலையளிக்க
விரும்பும் என் மனம்
நிபந்தனை விதிக்கிறது
நின்மடிவேண்டியே..!!
காலம் கைவிடாதென்ற
நம்பிக்கையில்
நின்வருகையை எதிர்பார்த்து
கண்ணீருக்கு விடுதலையளிக்க
காத்திருக்கிறேன்
விரைவில் வருவாயோ என்னவனே..??!!
உணர்வின் போராட்டம் அருமை.
ReplyDeleteமனதில் சிறைபிடித்து வைத்திருக்கும் வார்த்தைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டால். விடுதலை வேண்டி காத்திருக்கும் கண்ணீருக்கு காலம் கைவிடாது கட்டாயம் பதில் கூறும்,
அணைக்கட்டிற்குள் விடுதலைக்காக காத்துக்கொண்டிருக்கும் நீரின் மடையைதிறந்துவிட ஆதரவான, அன்புக்கரமானது பாசத்துடனும், நேசத்துடனும் நிச்சயம் விரைந்து வரும். அத்துடன் உணர்"வின்" போராட்டமும் வெற்றியடையும்.
வாங்க ஆனந்த்..நன்றி..:)
Deleteஅக்கா... கவிதை அருமையா இருக்கு...
ReplyDeleteரொம்ப சின்ன எழுத்தா இருக்கே...
நன்றி தம்பி..சரி செய்திருக்கிறேன்..:)
Deleteஉணர்வுகளை வெளிப்படுத்தும் ஆக்கம். அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.._/\_
Deleteஅமைதிக்கெதிராய்
ReplyDeleteபோராட்டம் செய்கிறது
விடுதலைவேண்டி..!
>>
ஏங்க!? ஏன்!? அமைதியா நிம்மதியா இருக்குறாது உங்களுக்கு பிடிக்கலியா?! சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கனுமா!?
ஹஹா...வாங்க தோழி..:)
Deleteஉண்மை தான் எவரோடு பகிர்ந்து கொள்கிறோம் என்பதை பொருத்து கண்ணீர் கூட அளககிவிடுகிறது.அருமையான கவிதை
ReplyDeleteதோழமையின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.._/\_
Delete