முகப்பு...

Wednesday, 23 October 2013

மழலை உலகம்...!!

உலக அரங்கில்
அன்றாடம் அரங்கேற்றப்படும்
அனேக நாடகங்களில்..

நொடிக்கொரு பாத்திரமேற்று
மனதை ஆக்கிரமிக்கும்
மழலைகளின் காட்சிகள்

உறக்கத்தில் உள்ளம் பூரித்து
சிந்தும் புன்னகை..

எதையோக்கண்டு அஞ்சி
உதடு சுழிக்கும் அழுகை..

இரவு,பகலறியாது
கை,கால் உதைத்து
படுத்தபடியான நடனம்....

பசிக்கான அழுகையா..?
உடலின் உபாதையா..?
தாயை பரிதவிக்க வைக்கும்
வீறிட்ட அழுகை..

தாய்ப்பாலை உமிழ்ந்து
படுக்கையில் ஓவியமிடும்
விளையாட்டு..

பசியாறிய சிலநொடிகளில்
கழிவுகளை வெளியேற்றும் முக்கல்..
சூடான சிறுநீரை
உற்றார்களின் மடியில் கழித்து
அவர்களிடத்தே ஏற்படுத்தும்
முகச்(சுழிப்)சிரிப்பு....

பகையாளி, உறவாளி
ஏழை,பணக்காரன்
ஜாதி,மதம்
சிவப்பு, கறுப்பு
ஏதுமறியா வெள்ளைச் சிரிப்பு...
விந்தையான உலகமிது..
நித்தமும் பார்க்கத்தூண்டும்
நிதர்சனமான காட்சிகள் நிரம்பி
அரங்கேறும் காட்சிகளனைத்தும்
சொர்க்கத்தை
அருகே கொணர்ந்து
நரகத்தின் வாயிலை
நிரந்தரமாக மூடச்செய்யும்
அரங்கமிது..!!
அன்றாடம் கண்டுகளிக்களாம்
அதிசய மழலை உலகத்திலே..!!

16 comments:

  1. அன்றாடம் கண்டு களிக்கலாம்
    அதிசய மழலை உலகத்திலே!..

    மழலைகளைப் போலவே - அழகான கவிதை!..

    ReplyDelete
  2. மழலை உலகம் சுவாரஸ்யமானது! இன்பமானது! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  3. மழலையர் உலகம் மகத்தானது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மழலை உலகத்தை கண்முன்கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. மழலைப்பேசும் அழகிய கவிதை

    ReplyDelete
  6. மழலைக் கவிதை மனதை மயக்கியது அக்கா...

    ReplyDelete
  7. மழலைகள் உலகம் மகத்தானது.

    http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__