தெருவோரம்
தனித்துவிடப்பட்ட
ஒற்றை விளக்குக்கம்பம்..!!
இன்னமும்
ஒளிவீசிக்கொண்டிருக்கிறது
யாருக்கேனும் உபயோகப்படுமென்று...!!
ஒன்றுக்கொன்று அருகேயிருக்கும்
கம்பங்களிலிருந்து
தனித்துவிடப்பட்டும்...,
மற்ற விளக்குகள்
அணைந்து ஓய்வெடுத்தும்...
தன் ஒளியை
விரும்புகிறார்களா
வெறுக்கிறார்களா
தெரியாமலே
ஒளிவீசிக் கொண்டிருக்கிறது
தொடர்ந்து..
வார்த்தையில்
வன்மை காட்டும் மனிதர்கள்போல்
வாழ்க்கையே விளையாட்டான
சிறுவர்கள் சிறுநீரினால்
தன்மீது வரையும் ஓவியத்தையும்
பொறுட்படுத்தாது..
தன் ஒளியை அலட்சியப்படுத்தி
தன் முகப்பு வெளிச்சத்தில் ஊர்திகள்
சாலையைக் கடந்தாலும்...
தனக்கு இடமளித்த
பூமிக்கேனும் வெளிச்சமாக இருக்க
ஒளிவீசிக்கொண்டிருக்கிறது
தொடர்ந்து...
இரவுப்பணி முடித்து
வீடு திரும்புவோருக்கு
காலடியில் ஊர்ந்துசெல்லும்
விடப்பூச்சிகளை அடையாளம் காண..
இங்குமங்கும் இரைதேடி
ஓடித்திரியும் எலிகள்
எவர் காலிலும் நசுங்கி மடியாமல் இருக்க..
எதையோ சாதிக்கப்போவதாய்
அதிவேகமாய் செல்லும்
வாகனங்கள்
மோதிக்கொள்ளாமல் இருக்க
அதிகாலை நடைப்பயிற்சியின்போது
அந்நியர்மீது மோதிக்கொள்ளாமல் இருக்க..
எவருடைய
பாராட்டையும்
அலட்சியத்தையும்
பொருட்படுத்தாது
உயிர்துறக்கும்வரை
ஒலியற்று
ஒளிவீசிக்கொண்டிருக்கிறது
ஒற்றை விளக்குக்கம்பம்..!!
ஒற்றைக்கம்ப விளக்கின் ஒளி இந்தப் படைப்பினிலும் ஒளி வீசி ரஸிக்கச்செய்தது. பாராட்டுக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா...:) _/\_
Deleteஒற்றைக்கம்ப விளக்கிற்கும் உயிர் கொடுத்து, தனிச்சிறப்பு கொடுத்து அழகாய்க் கவிதை எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாங்க தோழி..வாழ்த்திற்கு நன்றி..:)
Deleteதானுண்டு தன் வேலையுண்டு... வித்தியாசமான சிந்தனை... பாராட்டுக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ..:)
Deleteமின் கம்பம் இத்தனை சிந்தனைகளை கிளறிவிட்டதா? சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDelete:) மிக்க நன்றி தோழர்..:)
Deleteகவிதை நன்றாகவுள்ளது.
ReplyDeleteவாங்க தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)
Deleteவிளக்குக் கம்பத்திற்கும் - கவித்துவம்!.. அருமை!..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்..:)
Deleteவிளக்குக் கம்பம் கவிதை மிகவும் அருமை அக்கா...
ReplyDelete:) நன்றி தம்பி..
Delete