முகப்பு...

Thursday 26 December 2013

இயற்கை...

தம்முடைய நோய்க்கு, ஒரு தாவரத்தினைக் கண்டறிந்து சாப்பிட்டு   தானே மருத்துவம் பார்த்து தன் உடலை சுத்தப்படுத்திக்கொள்ளும் நாய்களின் புத்தி கூர்மை.
****
கண்முன்னே வளர்ந்து ஒய்யாரமாய் பூத்துக்குலுங்கும் தொட்டிச்செடியைக் காண்கையில், கொங்கைசுவைத்தக் குழந்தையும் குதித்து விளையாடுவதைக் கண்டு ரசிக்கும் தாயின் மனதாய் பூரிக்கிறது உள்ளம்..
****
அன்னியரைக் கண்டு அஞ்சும் குழந்தை, தன் அன்னையை இறுக அணைத்துக் கொள்வதுபோல்..
கிடைத்தவிடத்தைப் பற்றிக்கொண்டு தன்னைப் படரச்செய்யும் கொடிகள்.
****
யாரும் வலியுறுத்தாமலே
உணவிருக்கும் இடத்தையறிந்து

அணிவகுத்து முற்றுகையிடும்
எறும்புகள்...!!
****
அரைத்துவழித்து 
பச்சைநிற விழுதை

அழகாய் கரங்களில் 
ஓவியமாய் வரைய 

நிறம் மாறி 
நமையெல்லாம் 
மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மருதாணி.. !
****

12 comments:

  1. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணத்தை இணைக்க சென்றால் இங்கே --->(http://chellakirukkalgal.blogspot.in/2013/12/blog-post_19.html) செல்கிறது... கவனிக்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..சரி செய்துவிட்டேன்..:)

      Delete
  3. அனைத்தும் அருமை அக்கா...

    ReplyDelete
  4. மிக பிரமாதம்

    ReplyDelete

  5. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தங்களுக்கும் மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துகளும். :)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__