முகப்பு...

Tuesday, 24 December 2013

கோலம்..!!

மனதை 
மகிழ்ச்சியில் ஆழ்த்தி 
ஒருநிலை தியானத்தில் 
மூழ்க வைக்கவும்...
சிந்தனையைத் தூண்டச்செய்தும்
தேகப்பயிற்சியாகவும்,
மனப்பயிற்சியாகவும்
மகளிர்க்கு கைகொடுத்தும்..
தன் தனித்திறமையை 
வளர்த்துக்கொள்ள உதவும் 
ஆசானாகவும் விளங்கி..

பார்வையாளரையும்
பரவசப்படுத்தும் அரிய கலை 
கோலம்.. !

துள்ளித்திரியும் மானையும்
வண்ண மயிலையும், 
சுட்டெரிக்கும் சூரியனையும்
வண்ணத்தில் கட்டிப்போட்டு,
குதித்தோடும் அழகு முயலையும்
காய்த்துத்தொங்கும் பாகற்காய்
பூத்துக்குலுங்கும் வண்ணமலரென 
பேதங்களின்றி
ஓரிடத்தே
அறிமுகப்படுத்தும் 
திறமையிந்தக்கோலம்..!

பாவையர்களின் விரல்கள்
அரங்கேற்றும் 
அழகிய நடனத்தில் தோன்றிய
அற்புதக் கோலங்கள்
ஐயாறு தினங்களும்
அலங்கரிக்கிறது தெருக்களை...!!

21 comments:

  1. பாவையர்களின் விரல்கள் அரங்கேற்றும் அழகிய நடனத்தில் தோன்றிய அற்புதக் கோலங்கள் பற்றிய ஆக்கம் அருமை. படமும் அழகு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். நேற்றைய வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா...மிக்க நன்றி..தங்களது தொடர்ந்த வாழ்த்து எம் எழுத்தைமெருகேற்றட்டும்..:) _/\_

      Delete
  2. மார்கழிக்கான சிறப்புக் கவிதை மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..தங்களுக்குக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்..:)

      Delete
  3. வணக்கம்
    சகோதரி.

    தங்களின் கவிதை மிக அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
    தைப்பொங்கல் வருகிறது. கோலம் வரைவதில் திறமையை காட்டுங்கள் உங்களின் வீட்டில்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்..மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் சகோ..வாழ்க வளமுடன்..:)

      Delete
  4. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமையான் கவிதை, அழகிய கோலம்.

    ReplyDelete
  6. அழகான கோலம் போன்றே கவிதையும். கோலம் நீங்கப் போட்டதா!?

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி..கோலம் இணையத்தின் உபயம்..:)

      Delete
  7. கோலமும் கோலம் பற்றிய உங்கள் கவிதையும் மிகவும் அருமை காயத்ரி. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. வணக்கம் !
    வலைச்சரத்தின் வாயிலாக வருகிறேன். அழகிய கோலமும் கவிதையும் மனதை தொட்டது. நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. இனியாவின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..தொடர்ந்து இணைந்திருக்கவும்..:)

      Delete
  9. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4-part2.html?showComment=1391731226087#c3254533073173604043

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி சகோ..:) _/\_

      Delete
  10. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
    அழகாக வர்ணித்து இருக்கிறீர்கள் ...!!!
    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    My BLOG - jthanimai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி...தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..தொடர்ந்திருங்கள்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__