நின் கரம் தழுவும்
எழுத்தாணி
கலைமகளின்
வீணையாய் காட்சியளிக்க..!
நின் கவிதைக்கு
கலைமகளும்
தன் வீணையிசைக்கத்
தமிழ்மகளும்
தலையசைக்கிறாள்..!
எழுத்தாணியை உளியாக்கி
சிந்தனையை கவிதையாக்கி
சிற்பம் வடிக்கும்
கவிச்சிற்பியே...!
சிந்தனை தோட்டத்தில்
க ’விதை’ விதைத்து
மகிழ்ப் ”பூ”வை மலரச்செய்து..
நின் சிந்தையில் ஊறும்
கவியமுதைப் பருகிப் பசியாறி
மனமகிழ்ந்து...
மனமுவந்து
தமிழுக்கு..
தமிழன்னை வழங்கிட்ட
தமிழையுமே
தமிழ்..
வற்றாது வழங்கிட
நின்புகழ் வானுயரப் பரவிட
நானும் வாழ்த்துகிறேன் ...!
கவிச்சிற்பியின் பிறந்தநாளில்
உனை கவிதையில் வாழ்த்திடும் முயற்சி
சிற்பி வடித்த சிலைக்குமுன்
சிதறிக்கிடக்கும் சிறு துகள்களாய்....
சிந்தையில் தோன்றிய
எம் எழுத்துக்கள் சிதறி...
நின்
கவிதைக்குமுன்
முற்றுபெறாத கவிதையாய்
முடிவுறாமலே திகழ்கிறது...!!
படமும் கவிதையும் அருமை அக்கா....
ReplyDeleteதொடருங்கள்....
@குமார் ...நன்றி தம்பி..:)
ReplyDeleteஅருமை..... பாராட்டுகள்.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 5
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
வணக்கம். தங்களுக்கும் மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துகளும். :)
Delete