நான்
கருணையின்றி கொலைசெய்த
வார்த்தைகள்
கண்முன்னேத் தோன்றி
வினாவாயிரம் எழுப்ப...
கோபத்தில் திராவகமாய்
விழுந்த கொடிய வார்த்தைகள்...!
பாசத்தில் நெகிழ்ந்து
நெஞ்சம் தழுவிய வார்த்தைகள்..
தோழமைகளோடான
கேலி வார்த்தைகள்...
பக்தியில் நெக்குறுகிய
வார்த்தைகள்..
காதலில்
கனிரசம் சிந்திய வார்த்தைகள்..
கருணையில் உருகி
கசிந்த வார்த்தைகள்..
அலட்சியப் படுத்துவோரிடம்
அறிவுரை வார்த்தைகள்...
புரிதலற்றோரிடம்
புரியவைக்க விரயமாகிப்போன
வார்த்தைகளை
மௌனமாய் அடைகாத்திருந்தால்
இயல்பில் இருந்து
என்றேனும்
தன் பலம் நிரூபிக்க
தரணியில் நிலைத்து
முத்தாய் மிளிர்ந்திருக்கலாம்..!
சிந்திய வார்த்தைகளை
மீட்டெடுக்க முடியா சோகத்தில்
கொலைசெய்யப்பட்ட
வார்த்தைகளுக்கு
கண்ணீர் அஞ்சலி
செலுத்துகிறேன்...!
முத்தாய் மிளிர்ந்திருக்கலாம்..!
ReplyDeleteகட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html
நன்றி சகோ..காலையிலேயே பார்வையிட்டுப்பகிர்ந்துகொண்டேன்..:) வாழ்த்துகள்.
Deleteஅக்கா...
ReplyDeleteவார்த்தைகளை மீட்டெடுக்கப் பாருங்கள்...
கண்ணீர் அஞ்சலி செலுத்தி வார்த்தைகளை தொலைத்து விடாதீர்கள்...
கவிதை அருமை.
ஹ்ஹா...செய்திடுவோம்..நன்றி தம்பி..:)
Delete//சிந்திய வார்த்தைகளை மீட்டெடுக்க முடியா ?//
ReplyDeleteஅஞ்சலி அருமை.
மிக்க நன்றி ஐயா.._/\_
Deleteசிந்திய வார்த்தைகளை
ReplyDeleteமீட்டெடுக்க முடியா சோகத்தில்
கொலைசெய்யப்பட்ட
வார்த்தைகளுக்கு
கண்ணீர் அஞ்சலி
செலுத்துகிறேன்...!// அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!
மிக்க நன்றி சகோ..:)
Deleteஅருமை
ReplyDelete:) நன்றி சுமன்..
Delete