ஒவ்வொரு புறக்கணிப்பிலும் ஒரு பாடம் கற்பிக்கப் படுகிறது.
பாடத்தைப் படிக்கத்தவறியும், படிக்க விரும்பாமலும், படிக்க மறுத்தும், படித்தும் படிக்காததுமாயும் புறக்கணிப்புகள் வாழ்வில் தொடர்ந்து அனுமதிக்கப் படுகின்றன விரும்பியோ விரும்பாமலோ....!
****
பகிரப்படாத உணர்வுகளின்
கண்ணீர் முத்துக்கள்
விரயமாகாது
மனப்பெட்டகத்திற்கு
பலம் சேர்க்கிறது...!!
****
அலட்சியத்தை
அலட்சியப்படுத்த..
அலட்சியப்படுத்தப்படும்
அலட்சியமே மற்றொரு
அலட்சியத்திற்கு
அடித்தளம் அமைக்கிறது..!!
****
நீயமைத்துக்கொடுத்த பாதையில்
உன்
காலடித்தடம் நான் தொடர..
உன்
காலடித்தடம் நான் தொடர..
புதியபாதை உருவாக்கு
எனக்கூறியே
காணாமல் போகிறாய்....!!
****
அலட்சியமே மற்றொரு அலட்சியத்திற்கு
ReplyDeleteஅடித்தளம் அமைக்கிறது என்பது அப்பட்டமான உண்மை..
தொடர வாழ்த்துக்கள்...
ம்ம்..உண்மை...நன்றி சகோ..:)
Deleteவணக்கம்
ReplyDeleteஒவ்வொரு புறக்கணிப்பிலும் ஒரு பாடம் கற்பிக்கப் படுகிறது..சிறப்பாக சொன்னிர்கள்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம். சகோ...மிக்க நன்றி..:)
ReplyDeleteஅழகான தொகுப்பு...
ReplyDeleteதொடருங்கள் அக்கா...