பச்சைவண்ணத்தில்
பளபளக்கும் மேனியோடு
என் வீட்டு
நெல்லிக்கனியும்
இன்முகத்துடன் எனை நோக்க..
எடுத்துக்கழுவி..
எண்ணெயில் வதக்க
புண்ணாகி சுருண்ட கனிக்கு
மருந்திடாது
மிளகாயும், உப்புமிடித்து
அதன் மேனியில் சேர்த்து வதக்கியும்...
துண்டு துண்டாய் அதன் மேனி
கீறி கதிரவன் கண்ணெதிரே போட
காய்ந்து தன் நீர் வற்றியும்...
நெல்லிக்கனியுடன்
நீர்விட்டு மின்னரவையில்
இஞ்சி,வெல்லம் சேர்த்தரைத்து
அதன் குருதி சுவைத்தும்...
அரைத்து நெய் சேர்த்து
சீனிப்பாகிலிட்டு கிளறியும்..
எத்தனையெத்தனை
கொடுமைகள் செய்திடினும்
இயல்பு மாறாது சுவையளித்து
உடலுக்குப் புத்துணர்வூட்டும்
நெல்லிக்கனியை
அதிசமாய் நானும் வினவ..
சந்தர்ப்பத்திற்கேற்ப
எனை மாற்ற நானென்ன
மானிடனா - என்றுரைக்கும்
கனிக்கு கனிந்த புன்னகைத் தவிர
கடுஞ்சொற்கள் எதுவுமில்லை
என்னிடத்தே...!!
பளபளக்கும் மேனியோடு
என் வீட்டு
நெல்லிக்கனியும்
இன்முகத்துடன் எனை நோக்க..
எடுத்துக்கழுவி..
எண்ணெயில் வதக்க
புண்ணாகி சுருண்ட கனிக்கு
மருந்திடாது
மிளகாயும், உப்புமிடித்து
அதன் மேனியில் சேர்த்து வதக்கியும்...
துண்டு துண்டாய் அதன் மேனி
கீறி கதிரவன் கண்ணெதிரே போட
காய்ந்து தன் நீர் வற்றியும்...
நெல்லிக்கனியுடன்
நீர்விட்டு மின்னரவையில்
இஞ்சி,வெல்லம் சேர்த்தரைத்து
அதன் குருதி சுவைத்தும்...
அரைத்து நெய் சேர்த்து
சீனிப்பாகிலிட்டு கிளறியும்..
எத்தனையெத்தனை
கொடுமைகள் செய்திடினும்
இயல்பு மாறாது சுவையளித்து
உடலுக்குப் புத்துணர்வூட்டும்
நெல்லிக்கனியை
அதிசமாய் நானும் வினவ..
சந்தர்ப்பத்திற்கேற்ப
எனை மாற்ற நானென்ன
மானிடனா - என்றுரைக்கும்
கனிக்கு கனிந்த புன்னகைத் தவிர
கடுஞ்சொற்கள் எதுவுமில்லை
என்னிடத்தே...!!
//சந்தர்ப்பத்திற்கேற்ப எனை மாற்ற நானென்ன மானிடனா - என்றுரைக்கும் கனிக்கு//
ReplyDeleteசூப்பர் !
//கனிந்த புன்னகைத் தவிர கடுஞ்சொற்கள் எதுவுமில்லை
என்னிடத்தே...!!//
புன்னகை ! அது ஓர் பொன் நகை !! வாழ்க !!!
பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
வணக்கம் ... மிக்க மகிழ்ச்சி ஐயா..:)
Deleteஆங்காங்கே நெல்லிக்கனி போல அருமையான வர்ணனைகள். ;)
ReplyDeleteமிக்க நன்றி..
Deleteஅருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு.._/\_
Deleteஅக்காவுக்கு கவிதை எழுத சொல்லியா தரவேண்டும்... நெல்லிக்காயைப் பார்த்தால் எங்களுக்கு நாவில் எச்சில் ஊறும்.... அக்காவுக்கோ அழகிய கவிதை ஊற்றாய் வெளிவந்திருக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா...
ஹஹா தம்பீ....:) மிக்க நன்றி..
ReplyDelete