சுட்டெரிக்கும் கதிரவனும்
உனைத்தீண்டத் துடிக்க...
உன்மேனி தழுவமுடியா வருத்தத்தில்
வருணனோ பின்னடைய..
உன் முகத்தின் பொலிவில்
நிலவும் நாண...
நீ
என் கரம் கோர்த்து
நடக்கும் வீதிகள்
நம் வரவுக்காய் காத்திருக்க...
வருணனுக்காய்
வரமிருக்கிறது மரங்கள்...
நாமிருவரும் ஒதுங்குவதில்
தான் புனிதமடையவே...!
நீ
தரணிக்கு வந்தது
அவள் தவமென
கலைமகளும் பெருமைகொள்ள...!
நினைச்சுமந்தவளும்
நின்னறிவில்
நித்தமும் மகிழ்ந்திருக்க...
நின் கண்வீசும்
காதல் பார்வையில்
என் கண்மலர்கள்
கிறங்கித்தவிக்க...
சிதறிக்கிடக்கும் தானியத்தை
சுவைக்கும் பறவைகளாய்
உனைத்தீண்ட
புறத்தே
இயற்கையோடு அனைவரும்
காத்திருக்க...!
நீயோ
விளைந்த நெற்கதிராய்
செறுக்கற்று...
எவரும் வரவியலா
என்னகத்தே
மனமென்னும்
நிசப்த ஊஞ்சலில் நிரந்தரமாய்
ஆடிக்கொண்டிருக்கிறாய்
ஆடிக்கொண்டிருக்கிறாய்
புன்னகையணிந்தே...!!
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோ...மிக்க மகிழ்ச்சி..:)
Deleteஅழகிய கவிதை
ReplyDeleteவாங்க நன்றி..:)
Deleteஅருமை சகோ...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றியும், மகிழ்ச்சியும் சகோ..:)
Delete