முகப்பு...

Tuesday, 31 July 2012

சின்ன சின்ன ஆசை....!!!


ஆசமச்சான் ஆசமச்சான் கொஞ்சம்
என்னாசையுந்தான் கேளு மச்சான்..
என்னதிகாலை தொடங்கனும்
உம்முத்தத்தோட...

நா வாசக்கூட்டி கோலம் போட
நீ சாணத்தில பூவ வச்சி
அழகு கூட்டனும்....

அடுக்களையில் காஃபித்தண்ணி வெக்கயில
நீயும் அன்பாத்தான் அங்கங்கே
என கட்டிப்பிடிக்கனும்.....

குளிச்சி முடிச்சு சாமி கும்பிட
எஞ்சாமி நீயும் கூட நிக்கனும்...

பூப்போல இட்டிலியத்தான்
வெள்ள சிரிப்புக்கார வுனக்கு
புன்னகையோட நா ஊட்டனும்...

சோலிக்குப் போகயிலே
நீ சொக்கிப்போக
முத்தமொன்னு கொடுக்கனும்....

அப்பப்ப போன போட்டு
நீ ஆசவார்த்த பேச..
ஆறுமணிக்காவ நானுந்தவமிருக்கனும்..

கடிகாரமும் ஆறடிக்க..
வாசலிலே நா காத்துக்கிடக்கனும் ..
சோர்ந்து போன நீயும் முகங்கழுவி
எஞ்சேலையில முகம் துடைக்க..
சொர்க்கத்தத்தான் நா உணரனும்.....

மல்லிப்பூவ மச்சான் நீயும்
வச்சிவிடனும்...

எம்மடிமீது தலசாச்சு உலகக்கத நீ பேச
உம்முகம் பாத்து நா வியக்கனும்....

நீ நிலாச்சோறு ஊட்டும் விதம் கண்டு
மதியவளும் உம்மேல ஆசப்படனும்.....

அப்பப்போ சின்னதா சண்டையிடனும்..
ஆசவார்த்தை பேசி நீயும்
சமாதானஞ்செய்யனும்.....

நள்ளிரவு குளிரிலே நடுங்கும்
எனையிறுக்கி அணைக்கனும்..
சொல்லமுடியா ஆசயத்தான்
நீயும் சூதனமா புரிஞ்சுக்கனும்....


வருசத்துக்கு ஒன்னுன்னு
புள்ளைகள பெத்து போடனும்..
அதுகள வருசத்தின் பெயரால கூப்பிடனும்
பூமித்தாயும் என
பொறாமையா பாக்கனும்..
நம் புள்ளகளிடம்
கலைமகளும் கல்வி கற்கனும்...
அதக்கண்ட பிரம்மனும் திகைக்கனும்....
புதியதோர் பிரபஞ்சத்த உருவாக்கனும்...

இறவா வரமுனக்கு கிடைக்கனும்
பிரபஞ்சமே உம்பெருமைய பேசனும்..
உன் அன்புமுகம் பாத்தபடி
உன்னணைப்பில நா உசிரவிடனும்..

ஆச மச்சான் ஆச மச்சான்
என் சின்ன சின்ன
ஆசயத்தான் கேளு மச்சான்...!!





8 comments:

  1. அழகான, அன்பான பாடல்... வாழ்த்துக்கள்....

    நன்றி...


    உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  2. @திண்டுக்கல் தனபாலன்....தங்கள் வாழ்த்து என் எழுத்தை வளப்படுத்தட்டும் சகோ..

    ReplyDelete
  3. உங்களின் சின்ன சின்ன ஆசைகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி..பார்வையிடுகிறேன் தோழரே...

      Delete
  4. சின்ன சின்ன ஆசை அருமை.
    "வருசத்துக்கு ஒன்னு ரெம்ப சின்ன ஆசயா இருக்கே".
    இந்த சின்ன சின்ன அசையானது
    வருங்காலத்தில் தங்கள் எழுத்தால் பெரிய பெரிய ஆசைகளையும் நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள். வாழ்க வழமுடன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், நம்பிக்கையூட்டும் வாழ்த்திற்கும் நன்றி...:):)

      Delete
  5. அழகாய் இருகின்றது..கிராமத்தில் நடக்கும் காட்சிகளாக கண்முன்னே விரிகின்றது ...

    நம் புள்ளகளிடம்
    கலைமகளும் கல்வி கற்கனும்...
    அதக்கண்ட பிரம்மனும் திகைக்கனும்....
    புதியதோர் பிரபஞ்சத்த உருவாக்கனும்...///;;))

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__