பசுமைநிற புடவையிலே
கரும்பச்சை முந்தியிலே
வண்ணமலர் பூவோடு..
கண்கவர் அழகுடன்
கர்வத்துடன் காட்சியளிக்கும் மலையரசி..
கரும்பச்சை முந்தியிலே
வண்ணமலர் பூவோடு..
கண்கவர் அழகுடன்
கர்வத்துடன் காட்சியளிக்கும் மலையரசி..
இவளைக்காண
காளையரோடு கன்னியரும் போட்டியிட...
காளையரோடு கன்னியரும் போட்டியிட...
எழிலின் எழிலான
மலையரசியிவளிடம் மையல்கொண்ட
கருமுகிலும், வெண்மேகமும் போட்டியிட..
உணர்விற்கு உயிரூட்டுபவளை
எண்ணத்தில் எண்ண
எண்ணத்தில் எண்ண
ஏகாந்தநிலை கொள்பவர் ஏராளம்...
கவிஞர்களை ஈன்றெடுக்கும் தாயாகி..
காதலையும், காமத்தையும் கற்பித்து
கவிஞர்களை ஈன்றெடுக்கும் தாயாகி..
காதலையும், காமத்தையும் கற்பித்து
தன்னையுணர தவம் செய்யத்தூண்ட....
காலமெல்லாம்
காலமெல்லாம்
இவள்மடி உறங்கும்
ஆசையும் நிராசையாக...
மலர் சூடி, நகையணிந்து
பசும் பட்டுடுத்தி
புதுமணப்பெண்ணாய்
மூவிரண்டு திங்கள்
மலர் சூடி, நகையணிந்து
பசும் பட்டுடுத்தி
புதுமணப்பெண்ணாய்
மூவிரண்டு திங்கள்
உவகையளித்தவள்...
கோடையிலே
ஆதவனின் சினத்திற்கு அஞ்சியிவளும்
மூவிரண்டு திங்கள்
அழகுதனை அஞ்ஞாத வாசமனுப்ப.. .
ஆதவனின் சினத்திற்கு அஞ்சியிவளும்
மூவிரண்டு திங்கள்
அழகுதனை அஞ்ஞாத வாசமனுப்ப.. .
கரடு,முரடான மலையிவளும்..
முதியவளின் வறுமையாய்
காய்ந்த புற்கள் சூழ
காய்ந்த புற்கள் சூழ
காட்சியளிக்க...
பூவிழந்து, பொட்டிழந்து
வண்ணவுடை தவிர்த்த
கைம்பெண்கண்ட பெற்றோராய்
துடிக்குதே மனம்.......!!!!
வண்ணவுடை தவிர்த்த
கைம்பெண்கண்ட பெற்றோராய்
துடிக்குதே மனம்.......!!!!
மலை தாங்க கவிதை மலையரசிக்கு மகுடம் சூட்டுகிறது.
ReplyDeleteநன்றி குமார்...:):)
Deleteசிறப்பான இயற்கை கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் பூனையும் எலியும் பாப்பாமலர்! http;//thalirssb.blogspot.in
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழரே...தங்கள் தளத்தை பார்வையிடுகிறேன்..:)
Deletemalaikke-
ReplyDeletekavithai -
mazhaiyaa!?
வாங்க சீனி..கவிதை மழையா..? ஒரு சிறு துளி.....:):):)
Deleteநல்ல சிந்தனை வரிகள்...
ReplyDeleteஅருமையாக முடித்துள்ளது சிறப்பு...
@திண்டுக்கல் தனபாலன்....நன்றி சகோ..:):)
Delete