முகப்பு...

Thursday, 5 July 2012

மரணத்தில்-ஜனித்த-ஜனனம்....


அண்டசராசரமும் வியக்க..
ஆகாயத்தில் அரங்கேறும் நடனமிது..

பவனபுத்திரன் ஜதி சொல்ல..
நட்சத்திர ஒளியில்
வண்டினங்களின் ஒலியில்
கங்கையவள் தன் கொடியிடை அசைத்து
நடனமிடுகிறாள்...
பசுமை உடையணிந்த பயிர்கள்
வண்ண வண்ண உடையணிந்த மலர்களும்
உடன் நடனமாட...

புவனத்தில் தலைசாய்த்து
கண்கொள்ளாக் காட்சியதனை
வியந்தபடி ரசிக்க..

நடனத்தில் தெறித்த சலங்கை நீர்
மனம் குளிர்விக்க..

எழுத்திலடங்கா அறுசுவையும்
பரிமாறப்பட...
நடனத்தை ரசிப்பதா...?
உணவை  சுவைப்பதா..??
தடுமாறும் தேவர்கள் மத்தியில்
விழித்தபடிநானும்...

மணிநேர மரணத்தில்
சொர்க்கத்தில் ஜனித்த என் ஜனனம்
துறந்து  விழிக்க...

வற்றிய ஆறும்
வறண்ட புவியும்..
தென்றல் தவிர்த்த வெப்பக்காற்றும்...
தேவர்களாய்க் காட்சியளித்த விவசாயி
வற்றிய மார்பு நோக்கி
பசிக்கழும் குழந்தையின் தாயாய்
மனம் தொய்வுடன்..........!!!

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__