எண்ணத்துள் உதித்த கருவிற்கு
உணர்வோடு உணர்வூட்டி...
பார்த்து, கேட்டு, கண்டுணர்ந்து ரசித்து
எதுகையும் மோனையும் சேர்த்து
ஆசானின் ஆசியோடு..
தவமாய் சுமந்த
எழுத்துக்களைப் பிரசவித்துக்
”கவிதை”யெனப் பெயரிட்டேன்..
உணர்வுள்ள மரபுக்கவிதையும்
வெண்பாவும்
சிலேடையும்
புதுக்கவிதையுமாக....
சுகித்து சுமந்து பிரசவிக்கும்
கவிஞர்களிடையே..
உவமையும், உருவகமுமற்றுக்
குறைப்பிரசவமாய்
நான் பெற்றக் குழந்தைக்கு..
ஆசையாய் பெயர் சூட்டினேன்
கவிதையென..
எப்படியழைப்பேன் பெயரின்றி
என் குழந்தையை....??
கவிதை குழந்தை அருமையா இருக்குங்க...
ReplyDeleteநல்ல வரிகள் சகோதரி...
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்.
பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரரே...அவசியம் தொடர்ந்து வருகை தந்து எம்மை ஊக்குவிக்கவும்..குறையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள்..
Delete@கவிதை வீதி..நன்றி தோழரே..:):)
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்...மிக்க மகிழ்ச்சி சகோ..விவரம் தெரிவித்தமைக்கு..சென்று பார்வையிடுகிறேன்..:)
ReplyDeleteada daa arumai!
ReplyDelete:) நன்றி சகோ..:)
Deleteஇந்த குழந்தையை குறைப் பிரசவமென யார் சொன்னது? சொக்கத் தங்கமென மின்னுது
ReplyDeleteஹஹா...நன்றி சுமன்..:)
Delete