முகப்பு...

Friday, 20 July 2012

வாழ்க்கைப் பயணம்...


இல்லம் முதல் இடுகாடு வரை...
வாழ்க்கைப்பயணத்தில்தான்

எத்தனையெத்தனை அனுபவங்கள்..
எத்தனையெத்தனை மனிதர்கள்
சந்திப்புகள்...???

அன்பை அருவியென வழங்கும் சிலர்..
அன்புக்கும் அளவுகோல் கொண்டு அளப்பவர் சிலர்..
அன்பை படிக்கல்லாய் நினைக்கும் சிலர்..
அன்பைக்கூட தடைக்கல்லாய் நினைக்கும் சிலர்..
அன்புக்காய் ஏங்குவோர் சிலர்..
அன்பாக இருப்பதுபோல் சிலர்..

ஆற்றாமையில் சிலர்..
இயலாமையில் சிலர்..
இடுக்கண் களைபவர் சிலர்..
இடுக்கண் கொடுப்பவர் சிலர்..
ஈகைகுணத்தோடு சிலர்..

உறவை வரவாய் எண்ணும் சிலர்..
உறவே உயிரெனக் கருதும் சிலர்..
உறவை துச்சமென கருதும் சிலர்..
உறவின் உன்னதம் புரிந்தவர் சிலர்..

உணர்விற்கு உயிர் கொடுப்பவர் சிலர்.
உணர்விற்கு திராவகம் ஊற்றுபவர் சிலர்..

உணவே வாழ்வெனக் கருதும் சிலர்..
வாழ்வதே உணவிற்கெனக் கருதும் சிலர்..



பிறருக்கு படிக்கல்லாய் சிலர்,,
தடைக்கல்லாய் சிலர்..
படிக்கல்லையும் தடைக்கல்லாய் நினைக்கும் சிலர்
தடைக்கல்லையும் படிக்கல்லாய் மாற்றும் சிலர்..




சூழ்ச்சிவஞ்சகபொறாமையின் உருவமாய் சிலர்..
இதையறியாமல் இதில் சிக்குவோர் சிலர்..
நட்பிற்கு உதாரணமாய் சிலர்..
நட்பையும் நாடகப்பாத்திரமாய் எண்ணும் சிலர்..
நம்பிக்கையின் நட்சத்திரமாய் சிலர்..
நம்பிக்கையில் நம்பிக்கையிலாமல் சிலர்..
நம்பிக்கையில் நம்பிக்கையிருப்பவர் போல்
நடிப்பவர் சிலர்..

சாதிக்க வேண்டுமென சிலர்..
சாதனையேன் வாழ்வினிலே என சிலர்..

இறங்கப்போகும் இடமறிந்தும்
அடித்துப்பிடித்து பேருந்தில்
இடம்பிடிக்கும் சிலர்..
இறக்கும் தருவாயும் அறிந்துவிட்டால்
தாங்குமா இப்புவியுமே...??
கிடைத்த இப்பிறவியும்..
உதவியாய் இல்லாமல் உபத்திரமாய்
ஏனிருக்கவேண்டும்..??வாழ்க்கைச் சக்கரம் 
நிற்கும் இடமறியாத நேரத்திலே
எண்ணிப்பார்ப்போர் எத்துனைபேர் ..??

விருப்புவெறுப்புகோபம்
அலட்சியம்,அகங்காரம்ஆணவம்..
அன்புபாசம்,போட்டிபொறாமை..சூழ்ச்சிபாசாங்கு.............

நூற்றுக்கணக்கான குணங்களுடன்
கோடிக்கணக்கான மனிதர்களில்
ஆயிரக்கணக்கான அனுபவங்களும்
சந்திப்புகளும் நிறைந்த வாழ்க்கைப்பயணம்..

இத்துனை எண்ணச்சுமைகளை
சுமந்து முற்றுப்பெறும் பயணத்திலே...
சுமக்கப்போகும் நாலுபேருக்கு
நன்றி கூறி..
எரிக்கப்போகும் வெட்டியானுக்கும்
நன்றி கூறி..
இத்துனை சுமைகளையும் 
இறுதியில் ஏற்கப்போகும் இறைவனுக்கும்
நன்றி கூறி
வேண்டுகிறேன்..
இனிவேண்டாமே இப்பிறவி 
எனை ஆட்கொள்வாய் என்னிறைவா...!!!




4 comments:

  1. அக்கா...
    அருமையான கவிதை...
    நீ.........ண்ட கவிதையானாலும் மனதில் நின்ற கவிதை.

    ReplyDelete
    Replies
    1. @சே.குமார்...நன்றி தம்பி..நீ......ண்ட கவிதையையும் பொறுமையாக படித்து கருத்துமிட்டிருக்கிறாய் மகிழ்ச்சி....:):):)

      Delete
  2. நூற்றுக்கணக்கான குணங்களுடன்
    கோடிக்கணக்கான மனிதர்களில்
    ஆயிரக்கணக்கான அனுபவங்களும்
    சந்திப்புகளும் நிறைந்த வாழ்க்கைப்பயணம்..//
    அருமையான கவிதை.

    நாள்தோறும் நாம் சந்திக்கும், அனுபவங்களை தரும் மனிதர்களுடன் தான் வாழ்ந்து ஆக வேண்டி இருக்கிறது

    வாழ்க்கைபயணத்தில் இறைவன் அழைக்கும் வரை.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__