மரத்திற்கு மரம் தாவிக்குதித்து ஒருநொடி விழுந்துவிடுமோ என நமையெல்லாம் அச்சத்தில் ஆழ்த்தி தன்னுடைய பலவகைக் குறும்புத்தனங்களினால் நமையெல்லாம் மகிழ்விக்கும் குரங்குகள்.. :)
---
ஆகாய காகிதத்தில்
இயற்கையெழுதிய அழகிய ஓவியத்தில்
வகைவகையான வண்ணத்தினால்
அழகாய் மிளிர்ந்து
நமையெல்லாம் வியப்பில் ஆழ்த்தும்
வானவில்..
வகைவகையான வண்ணத்தினால்
அழகாய் மிளிர்ந்து
நமையெல்லாம் வியப்பில் ஆழ்த்தும்
வானவில்..
---
வறுமையில் - நிறைவையும்
சோர்வில் - சுறுசுறுப்பையும்
சோகத்தில் - மகிழ்ச்சியையும்
சோர்வில் - சுறுசுறுப்பையும்
சோகத்தில் - மகிழ்ச்சியையும்
மனிதனுக்கு அளிக்கும் மகத்தான மருந்தாய்
இயற்கை மனிதனுக்கு வழங்கியிருக்கும்
குழந்தையின் சிரிப்பு...
---
ரசனையற்றவர்களைக்கூட
ஏதாவது ஒருநொடியில்
தன்வசம் ஈர்த்துத் தன் அழகால் மகிழ்வித்து
தன் மணத்தால் மனதை குளிர்வித்து
முகத்தில் புன்னகையைத் தாங்கச்செய்யும் மலர்கள்...
---
ஆஹா! நம் மூதாதையர்களுக்கு ஒரு கவிதையா பலே! பலே!
ReplyDeleteவாங்க தோழி..நன்றி...:)
Deleteaamaam...
ReplyDeleteஎன்றும் ரசிக்க வைக்கும் இயற்கையை வரிகளில் கண்டு ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ..:)
Deleteவார்த்தைகள் எம்முள்
ReplyDeleteகாட்சியை விரித்துவைத்து
மனத்தைக் குளிர்வித்தன
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
வாங்க தோழர்..நன்றி..:)
Deletetha.ma 3
ReplyDeleteஅருமை அக்கா.
ReplyDeleteரசித்தேன்.
நன்றி தம்பி...:)
DeleteSUPER-SUPER
ReplyDeleteநன்றி தோழரே.
Delete