முகப்பு...

Thursday, 11 July 2013

காதல்...


காதல் என்ற சொல் 
காதலாகுமா....??!!!

காதல் கொண்டவர்
காதலுடன்
காதலை வினவ....?

காதல் 
காதலென்ற சொல்லிலில்லை...
காதல் கொண்டோர்
காதலை
காதலுடன்
காதலுக்கு 
காதலாய் உணர்த்த..
காதல் 
காதலின் காதலை
காதலுடன் உணர்வதே காதல்..!! 

காதலின் பதில்கண்டு
காதல் கொண்டவர்
காதலை உணர்த்திய 
காதலிடம்
காதலை உணர்ந்த தெளிவுடன்
காதலுடன் விடைபெறுகிறார்...!!!




16 comments:

  1. காதலைப் போலவே
    காதல் கவிதையும்
    மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கு
    அருமையானது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர்ந்த ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது தோழர்..நன்றி...:)

      Delete
  2. அதுவும் ஒரு உணர்வே என்பது சொன்னவிதம் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி தோழர்..:)

      Delete
  4. இதற்க்கு விளக்கம் தெரியவில்லையே

    ReplyDelete
  5. கா வில் ஆரம்பித்து கா வில் முடித்த ஒவ்வொரு வரியும் அழகு..

    ReplyDelete
  6. காதல் எவ்வளவு சிறப்பானது அக்'கா'வின் கவிதையில் தெரிகிறது.
    அருமை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஹஹா....நன்றி தம்பி...கா வின் சிறப்பே தனிதான்..

      Delete
  7. காதல் என்ற சொல்
    காதலாகுமா என துவங்கி
    கடைசியில்
    காதலில் வெற்றி பெற்று விடைபெருகிறார்
    நானும் காதலித்து வெற்றியுடனே செல்கிறேன்
    கவிதாயினி காயத்ரியின்
    இந்த கா கா கவிதையை காதலித்த வெற்றியில்தான்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__