வரமென
நானளித்த
வாழ்வில்
கீரையும், காயும், கனியும்
உண்டுகளித்து
ஆரோக்கியமாய்
வாழ்ந்தகாலமும்
இறந்தகாலமாய்ப்
போகுமோ..?
நாகரீக
வாழ்க்கையில்
நாட்டம் கொண்டே
பீசாவும்
பண்ணும் உண்டு ரசித்து
மருத்துவமனைக்கு
விருந்தாளியாய்
சென்றுவரும்
நிகழ்காலமும்
எதிர்கால
நிசமாகிப்போகுமோ...??
கரம் நீட்டி
குளிர்காற்று வழங்கி
உள்ளம்
குளிர்வித்த
மரம் வெட்டி
மாளிகை கட்டி...
உணவை வாரி
வழங்கி
குடும்பம் பல
வாழவைத்த
நிலமழித்து
மனையாக்கி
நித்தமும் கூவி
கூவி விற்க..
மானிடா...!!
நிசம்
நிழலாய் சிரிக்கிறதே
உனைப்பார்த்தே..
உணவளிக்கும்
தாயவளைக் கொன்றே
நீ
மதிதுறந்து
மனையாக்கி
பலரை
நிர்மூலமாக்கும்
விபரீதம்
உணராயோ..??
ஏதுமற்ற
நிலையிலே
நீ
எடுத்துண்ண
மீதமிருப்பது
மண்ணும், கல்லுமென
உணராயோ..?
உள்ளிருக்கும்
விபரீதம்
உணர்ந்தே
விழித்திடுவாய்
இயற்கையன்னை
நானும்
இன்னல் சகித்து
உரைக்கின்றேன்
நீ
இன்பமாய்
வாழ்ந்திடவே..!!
/// உள்ளிருக்கும் விபரீதம்
ReplyDeleteஉணர்ந்தே விழித்திடுவாய்... ///
சரியாக மிகச்சரியாக உரைத்தீர்கள்...
வாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி சகோ..தங்கள் வாழ்த்து எம்மை வளப்படுத்தட்டும்..:)
Deletearumai..
ReplyDeleteநன்றி தோழர்...:) _/\_
Deleteஏதுமற்ற நிலையிலே
ReplyDeleteநீ
எடுத்துண்ண மீதமிருப்பது
மண்ணும், கல்லுமென
உணராயோ.///
நல்ல வரிகள்... மற்றபடி பொதுவாகச்சொல்ல வேண்டுமென்றால் கவிதையின் கருப்பொருள் நன்றாக இருந்த போதிலும் அது வார்த்தைக்கோர்ப்பில் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது... கிளாரிட்டி கொஞ்சம் கம்மி என்பது எனது எண்ணம்...
மதிதுறந்து மனையாக்கி ////
நிலமழித்து மனையாக்கி////
மரம் வெட்டி
மாளிகை கட்டி.///
கவிதை மீண்டும் மீண்டும் ஒரே கருத்தில் சுழன்றதைப்போன்றதொரு ஃபீல்...
மற்றபடி கவிதை சிறப்பே...
வாழ்த்துக்கள்... கருத்தில் தவறிருப்பின் மன்னிக்கவும்... நன்றி
வாங்க தோழரே..வெளிப்படையான கருத்திற்கு நன்றியும், மகிழ்ச்சியும்..:)
Deleteவிபரீதத்தை உணராமல் விலைபோகின்றன விளை நிலங்கள்! நல்லதொரு கவிதை! நன்றி!
ReplyDeleteநன்றி தோழரே...:)
Deleteநன்றி தம்பி..:)
ReplyDelete