மனிதர்களைக்
கொள்வதற்குப் பயன்படும்
அன்பைக்
கொல்வதற்கும் பயன்படுத்தி
கொண்டும், கொன்றும் ..
அன்பு கொள்ளக்கூடியதா..? கொல்லக்கூடியதா...?
அன்பை
அன்பே தன்னாய்வு
செய்யும்படியாக
அன்பு கொள்ளப்பட்டும்,
கொல்லப்பட்டும் வருகிறது..!!!
---
பற்றியதை விடாது
பற்றிக்கொண்டு
பற்று கொள்ளும் மனம்...
பற்றியதை
விட்டுவிட்டு
பற்றற்றிருக்க
பற்றுகொள்ளும் மனம்..!!
பற்றிக்கொண்டு
பற்று கொள்ளும் மனம்...
பற்றியதை
விட்டுவிட்டு
பற்றற்றிருக்க
பற்றுகொள்ளும் மனம்..!!
--
மனதை மகிழ்விக்கும்
ரோசாவின் மணம்
உணரும்வேளையில்
கிழித்துக்காயப்படுத்திய
முற்களும் நினைவுக்கு வருவதுதான்
ம(னித)னதின் இயல்போ...?!
ரோசாவின் மணம்
உணரும்வேளையில்
கிழித்துக்காயப்படுத்திய
முற்களும் நினைவுக்கு வருவதுதான்
ம(னித)னதின் இயல்போ...?!
கொல்லப்பட்டால் அதற்கு பேர் அன்பில்லை...
ReplyDeleteமனதைப் பொறுத்து முள்ளும் தெரியும்...!
வரிகளால் இன்றைய நிலையை அறிய முடிகிறது...
நன்றி சகோ..:)
Deleteஅருமை.
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை..... கவிதைப் பகிர்வுக்கு பாராட்டுகள்.....
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள்.....
வாங்க தோழர்...வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி. :) _/\_
Deleteபற்றற்று வாழ பற்றுவைக்கும் மனம் - சிந்திக்கவைக்கிறது. முரண்சிந்தனைகள் யாவும் அருமை. பாராட்டுகள் கவிக்காயத்ரி. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க தோழி..தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும். வாழ்க வளமுடன். _/\_
DeleteVisit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html
ReplyDeleteதகவலுக்கு நன்றி சகோதரரே..:) _/\_ மகிழ்ச்சி
Delete