முகப்பு...

Monday 27 January 2014

மௌனத்தின் மொழி..


உணர்வுடன் அணுகவேண்டியவற்றை யதார்த்தத்துடனும், யதார்த்தத்துடன் அணுகவேண்டியவற்றை உணர்வுடனும் அணுகினால், சிக்கலே அதிகமாகும் என்பதை பல நேரம் மறந்துவிடும் மனம்...


*****

வார்த்தைகளுக்கு அடிக்கப்படும் வண்ணத்தை காணாததுபோல் மௌனக்கண்ணாடி அணிந்து செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது பலநேரம்..


*****

மனம்விட்டுப்பேசுவது எல்லாம் மனதாரப் பேசுவதாகிவிடாது...


*****
வார்த்தைகளின் மேல் பூசப்பட்ட வர்ணங்களை நீக்கி அதன் சுயநிறத்தை அறியமுடியும் என்பதை அறிந்தாலும், வார்த்தைக்கு வர்ணமடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து பூசிக்கொண்டுதான் இருக்கின்(றோம்)றனர்.:)
*****
வார்த்தைகளின் வர்ணம் மூச்சைத் திணறடிக்கச் செய்யும்போது, மௌனத்திரை கிழித்தெறியப்படுகிறது...விரும்பியோ விரும்பாமலோ..
*****

7 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    நல்ல கருத்துள்ள சிந்தனைத் துளிகள்.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. சகோ...மனமார்ந்த நன்றிகள்..:)

      Delete
  2. மௌனத்தின் மொழி மிக அருமை.....

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__