தன் உணர்வுகளுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பிறரின் அன்பை இழக்கச்செய்(கிறது)யும் .
---
கோபமும் வருத்தமும் கூடிப்பேசினால் விளைவு உண்ணாவிரதம் ..
---
அதிகப்படியான சுயபச்சாதாபமும், தற்புகழ்ச்சியும், சுயதம்பட்டமும் சிலநேரம் திணறடிக்கவே செய்கிறது(தே..!!).
--
அன்பானவர்களின் கோபத்தைத்தாங்கும் மனம், அவர்களின் வருத்தமான ஒற்றை சொல்லைக்கூட தாங்க முடிவதில்லை.
--
சற்றே இறுக்கமாக இருக்கும் கணவனை நண்பனே என விளித்து (விளையாட்டாய் சீண்டி) இறுக்கத்தைத் தணித்து சற்றே கோபத்தைத் தூண்டுவதுமாகும்...:)
--
மௌனத்தின் உச்சத்தில் இருப்பவரை பேசவைத்தும்,
பேசியவரை மௌனத்தின் உச்சிக்கு அழைத்துச்செல்லவும் அன்பானவர்களாலேயே முடிகிறது...
---
அந்நியமாய் அருகிலிருப்பதைவிட விரும்பப்பட்டவராக விலகியிருக்கலாம்.
---
விரும்பியவர் வழங்கினாலும், விரும்பி ஏற்றாலும் காயத்திலிருந்து வழியும் குருதி சிகப்பு நிறமாகத்தான் இருக்கும்... :)
--
தன் உணர்வுகளுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பிறரின் அன்பை இழக்கச்செய்(கிறது)யும் .
ReplyDelete>>
நச்
வாங்க மிக்க மகிழ்ச்சி..:)
Delete"அன்பானவர்களின் கோபத்தைத்தாங்கும் மனம், அவர்களின் வருத்தமான ஒற்றை சொல்லைக்கூட தாங்க முடிவதில்லை".உண்மைதான்
ReplyDelete:) வாங்க மிக்க மகிழ்ச்சி..:)
Deleteஅனைத்தும் சிந்திக்க வைப்பவை! நன்று!
ReplyDeleteவாங்க ஐயா...நன்றி.. _/|\_
Delete