என்னுள் இருந்து
என் எண்ணங்களை ஆட்சிசெய்யும்
என்னவனைக் கவிதையாய் வடித்திட
உருகும் மனத்துடன்
விடியும் ஒவ்வொரு நாளும்
விரும்புகிறேன்..!!
வார்த்தைகள்
வசப்படாது வஞ்சனை செய்திட
மனதாளும் மன்னவனை
வார்த்தையில் அடக்கிடவும் இயலுமோ..?
மனதைச் சுண்டியிழுத்து
நாடி, நரம்புகளை புடைக்கச்செய்து
எங்கோ இருந்தபடி
எனை வீணையாய் மீட்டும்
ஆழி அலையின் ஓசையாய்
ரசிக்க வைக்கும் கம்பீரக் குரல்...
ரசிக்க வைக்கும் கம்பீரக் குரல்...
மனதிற்குள் மறைந்திருந்து
நான் விழிமூடும் நேரத்தில்
கதிரவனையே கூசச்செய்யும்
பார்வையுடன்..
மின்னலும் வெட்கி விலகும்
பிரகாச முகத்தின் நர்த்தனம்...! !
தரணியையே கரங்களில் அடக்கி
எதிரியையும் வசப்படுத்தும்
பிரபஞ்சம் பிரமிக்கும்
கூறிய அறிவு...!
குளிர்ந்த நிலவாய்
தோற்றத்தில் அமைதி...!
தோற்றத்தில் அமைதி...!
என்றும்
படைசூழ பவனிவரும் அழகு...!
என் இதயத்தில்
ஆயுள் தண்டனையனுபவிக்கும்
அன்புக் கைதி...!!
சுறுசுறுப்பில் எறும்பு..
மனோபலத்தில் யானை...சிந்தனையின் சிற்பி...
அந்தக்காலனையும்
என்னருகே அண்டவிடாத
உன்னருகாமை...!!
பாடுபொருள்
பலவாயிரம் இருந்திடினும்
பார்க்கும் பொருளெல்லாம்
நீயே பாடுபொருளாகிட...
எழுதிவைத்த வார்த்தைகளுமே
எண்ணத்தைப் பிரதிபலிக்காது போக..
ஏமாற்றத்துடன்
எழுதப்படாத கவிதையினை
எண்ணத்தில் சுமந்தபடியே
கவிதைவடிக்கும் வார்த்தைகளும்
வசப்படும் நேரத்திற்காய்
காத்திருக்கிறேன்...!!
காத்திருந்தால் கட்டாயம் வசப்படும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை..... பாராட்டுகள்.
ReplyDeletevery sweet
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும். :)
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
அறிமுகம்செய்தவர்-காவிகவி
பார்வையிட முகவரி-வலைச்சரம்
அறிமுகத்திகதி-23.07.2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பகிர்விற்கு நன்றி சகோ. பார்வையிடுகிறேன்..:)
Deleteவலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
ReplyDeletehttp://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_23.html
வாழ்த்துக்கள் ...!
நன்றியும், மகிழ்ச்சியும் தோழமையே..:)
Deleteவணக்கம் கவிக்காயத்ரி !
ReplyDeleteஎழுதாக் கவியுள்ளே எண்ணற்ற ஏக்கம்
வழுவாமல் தந்தீர் வரிந்து !
இனியாவும் இவ்வலையை இன்புற்றாள் அங்கு
கனியாக கண்டேனே இங்கு !
வாழ்த்துக்கள் தொடரட்டும் கவிப் பயணம் !
வாழ்க வளமுடன்
வணக்கம். _/|\_. இயற்கையின் இலவசங்களை எதிர்ப்பின்றி எடுத்துக்கொண்ட சீராளன் இங்கே வருகை புரிந்து, எழுத்துலகில் அகரம் படிக்கத்துவங்கியிருக்கும் எமக்கு தம் கருத்தையே கவிதையாய்க்கொடுத்து வாழ்த்தியமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும் நவில்கிறேன். :)
Delete